www.garudabazaar.com

BREAKING: சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் வேற லெவல் அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அயலான்', 'டாக்டர்' படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. 

sivakarthikeyan don movie new update on shooting

இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

sivakarthikeyan don movie new update on shooting

'டாக்டர்' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

sivakarthikeyan don movie new update on shooting

இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளதால், கனிசமாக தனது உடல் எடையைக் குறைத்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தடைபட்டது. 

sivakarthikeyan don movie new update on shooting

தடைப்பட்ட படப்பிடிப்பு இன்று (05.08.2021) மீண்டும் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது.  இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sivakarthikeyan don movie new update on shooting

S.J சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

BREAKING: சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் வேற லெவல் அப்டேட்!!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

sivakarthikeyan don movie new update on shooting

People looking for online information on Don, Priyanka Mohan, Sivakarthikeyan will find this news story useful.