www.garudabazaar.com

LATEST: தெலுங்கில் ரிலிசாகும் சிவகார்த்திக்கேயன் நடிக்கும் புதிய படம்! வெளியான மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோலமாவு கோகிலா' புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'டாக்டர்'.

sivakarthikeyan doctor movie telugu release announcement

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனம் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இந்நிலையில் டாக்டர் (Doctor) திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகிறது. இதனை தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. 

sivakarthikeyan doctor movie telugu release announcement

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் (Don) படத்தில் நசித்து கொண்டு இருக்கிறார். இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார் மற்றும் சிவகார்த்திக்கேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

sivakarthikeyan doctor movie telugu release announcement

இதற்கிடையில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் டெல்லியில் விஜய்யின் பீஸ்ட் (Beast) படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

sivakarthikeyan doctor movie telugu release announcement

People looking for online information on Priyanka Mohan, Sivakarthikeyan will find this news story useful.