சல்மான்கானுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த கதி -ரசிகர்கள் கடும் விமர்சனம்
முகப்பு > சினிமா செய்திகள்பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வரும் போது ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சிக்கிறார். அதனை பார்த்த சல்மான் கான் ஃபோனை தட்டி விட்டு கண்டுக்காமல் சென்றார்.

அந்த ஃபோன் நீண்ட தூரம் பறந்து சென்று விழுந்தது. இதனையடுத்து அந்த ரசிகர் செய்வதறியாது திகைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து செல்ஃபி எடுக்கும் போது சல்மானிடம் அனுமதி கேட்டிருக்கலாம் என்று அவருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், அவர் ஃபோனை தட்டி விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சிலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் தபங் 3 திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை பிரபு தேவா இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் சல்மானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தார். இந்த படத்தை தமிழில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.