சிவகார்த்திகேயன் தயாரித்த ’வாழ்’ திரைப்படத்தின் டீசர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 15, 2019 01:50 PM
’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ’வாழ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

எஸ்கே புரடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தனது முதல் தயாரிப்பாக ‘கனா’ படத்தை கடந்த ஆண்டு தாயாரித்தார். இதைத் தொடர்ந்து அவர் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக வெளியாகும் படம் ’வாழ்’.
2016ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘அருவி’ திரைப்படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். ’அருவி’ ஒரு பெண்ணை மைய்யப்படுத்திய திரைப்படம் என்பதால் ’வாழ்’ படமூம் அதேபோன்றதொரு கதைக்களம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
’வாழ்’ அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வர உள்ளது. விரைவில் அப்படத்தின் டிரைலரும், பாடல்களும் வெளியிடப்படும்.
Here is the teaser of our @SKProdOffl ‘s next #Vaazhl directed by dear @thambiprabu89 - https://t.co/pkpuQHWgjX 👍😊 Hope u all wil lik tis😊 #VaazhlTeaser @KalaiArasu_ @shelley_calist @pradeepvijay @raymondcrasta @dhilipaction @madhuramoffl @SibiMarappan @SonyMusicSouth
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 15, 2019
சிவகார்த்திகேயன் தயாரித்த ’வாழ்’ திரைப்படத்தின் டீசர் இதோ வீடியோ