வீட்டுவேலையில் சம்பாரிச்ச காசு போதும்னு சொன்ன ரமணியம்மாள்.. பாடகர் ஸ்ரீநிவாஸ் உருக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி பாடகி திடீரென மரணம் அடைந்திருக்கிற செய்தி, தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை உலகை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த, ‘சரிகமபா’ பாடல் நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ்பெற்ற பாடகி, ராக்ஸ்டார் ரமணி அம்மாள். இவர் தற்போது உடல்நல குறைவால் காலமாகி இருக்கிற செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ராக்ஸ்டார் ரமணி அம்மாள் என பிரபலமாக அறியப்பட்ட ரமணியம்மாள் இந்திய நாட்டுப்புறப் பாடகியாவார். திரைப்பட பின்னணி பாடகியாகவும் மிகவும் போராட்டங்களை சந்தித்த பின் பிரபலமானார். 1954 ஆம் ஆண்டு சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் பிறந்த இவர், கடந்த 2017-ஆம் ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல பாடல் நிகழ்ச்சியான சரிகமபா சீனியர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பின்னர் ஜூங்கா, சண்டக்கோழி 2, காப்பான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் பாடக்கூடிய வாய்ப்பை பெற்ற ரமணியம்மாள் வெளிநாடுகள் பலவற்றிலும் நடந்த இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில் சுமார் 63 வயது ஆன இவருடைய மரணத்திற்கு திரை, சின்னத்திரை மற்றும் இசையுலகினர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்நிலையில், பிரபல பாடகரும், ‘ச ரி க ம ப சீனியர்ஸ்’ நிகழ்ச்சி நடுவர்களில் ஒருவருமான ஸ்ரீநிவாஸ், ட்விட்டர் பக்கத்தில் ரமணியம்மாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “மேடையில் மட்டுமல்ல, வெளி உலகத்திலும் ராக் ஸ்டாராக திகழ்ந்த ரமணியம்மா, இப்போது உயிருடன் இல்லை. அவர் நிகழ்ச்சிக்கு வந்தபோது, இசை மீதான தீவிரம் குறையாமல் இருந்தார். அதனாலேயே அவரை பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தது, ரன்னர் அப் ஆகவும் வந்தார்.
வீட்டு வேலை செய்து அதில் வந்த குறைந்த ஊதியமே பெற்ற ரமணியம்மா, ‘எனக்கு இது போதும் சார்’ என்று சொன்னது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. நிகழ்ச்சி ஷூட்டிங்கில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். தனக்குப் பிடித்த எம்ஜிஆர்/கண்ணதாசன் பாடல்களைப் பாடுவார். அப்போது மேடை அதிரும்.
என்னைப் பற்றியும், எனது குடும்பத்தாரை பற்றியும் போனில் அழைத்து தவறாமல் நலம் விசாரிப்பார். கடைசியாக, ஒரு மாதம் முன்பு அவர் போனில் பேசினார். அவருடைய உற்சாகமான குரலை மிஸ் பண்ணுகிறேன். வாழ்க்கையில் தன்னிடம் இல்லாததை பற்றிக் கவலைப்படாமல், இருப்பதை வைத்து கொண்டாடியவர். பிரியாவிடை, அன்புள்ள ராக்ஸ்டார் ரமணியம்மா” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Saami Villain Kota Srinivasa Rao Clarifies On His Demise Rumours
- Jayaram For Mahesh Babu Pooja Hegde SSMB28 Trivikram Srinivas
- Popular Actor TSR Srinivasan About CM MK Stalin And Edapadi His Fans
- TSR Srinivasan About Movies With Vijay Sethupathi Exclusive
- Popular Actor TSR Srinivasan About Ayali Web Series Exclusive
- Mohanlal Vikram Hrithik Roshan Post For Srinivasa Murthy Demise
- Actor Suriya Tweet About Srinivasa Murthy Demise
- Dubbing Artist Srinivasa Murthy Passed Away
- Thoovaanam Director Haricharan Srinivasan Passed Away
- Chiyaan Vikram To Team Up With Mahesh Babu For SSMB28 With Trivikram Srinivas? Official Word Here
- Superstar Mahesh Babu, Trivikram Srinivas New Movie SSMB28 Launched
- Singeetam Srinivasa Rao Dikkatra Parvathi In CIFF Jan 2022