பல இயக்குநர்களின் ஆசான்!! இயக்குநரின் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்..
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல இயக்குனர் மற்றும் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் ஆசானாக இருந்து வந்த ஹரிச்சரண் சீனிவாசன் மரணம் அடைந்தார். இவரது மறைவு தென் இந்திய திரை உலகில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூவானம் என்னும் திரைப்படத்தை இயக்கியவர் ஹரிச்சரண் சீனிவாசன். நியூட்டன் என்பவருடன் சேர்ந்து இவர் இந்த படத்தை அவர் இயக்கி இருந்தார்.
இதே போல, மூன்று முறை தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்று, அர்ஜுனா விருது பெற்றுள்ள வி. சந்திரசேகர் பயோபிக்கையும் தமிழில் இயக்கியிருந்தார் ஹரிச்சரண். இது 26 எபிசோடுகளாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயா டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. ஒரு விளையாட்டு பிரபலத்தை மையப்படுத்தி தமிழில் ஒளிபரப்பப்பட்ட முதல் தொலைக்காட்சி சீரியல் என்ற பெருமையையும் இது பெற்றிருந்தது.
அதேபோல கடந்த 2012 ஆம் ஆண்டு, "Koel" என்ற ஹிந்தி டெலி ஃபிலிமிற்கும் கதை மற்றும் திரைக்கதையை ஹரிச்சரண் எழுதி இருந்தார். இதேபோல எக்ஸ்கியூட்டிவ ப்ரொடியூசர் ஆகவும் இருந்துள்ள ஹரிச்சரணின் மறைவு, தற்போது திரை உலகை சேர்ந்த பலரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
இவரது மனைவியான ரேக்ஸ் (Rekhs), சுமார் 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு சப்டைட்டில் கலைஞராக பணிபுரிந்துள்ளார். நடிகர் விஜய்யின் 13 படங்களுக்கு மேல் சப்டைட்டில் கலைஞராக பணிபுரிந்துள்ள ரேக்ஸ், தற்போது வெளியாகியிருந்த வாரிசு உள்ளிட்ட திரைப்படத்திலும் பணிபுரிந்திருருந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா, எந்திரன், பாகுபலி, கபாலி, மகரிஷி, விக்ரம் என பல திரைப்படங்களுக்கும் சப்டைட்டிலிஸ்ட் ஆர்டிஸ்ட்டாக ரேக்ஸ் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹரிச்சரணின் மறைவை அடுத்து பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Subtitlist Rekhs It Is A Challenging Task To Subtitle Santhanam's Scenes
- Popular Sub-titlist Rekhs On Her Subtitling Journey In Films
- Arrambam (aka) Aarambam Is Being Subtitled By Rekhs
- What Ethir Neechal Is Missing !, Rekhs, Ethir Neechal
- The Importance Of Good Subtitles, Rekhs, Latha
- Noted Subtitlist Rekhs Honored , Rekhs, Raindropss Women Achiever Awards
தொடர்புடைய இணைப்புகள்
- First Recipient For The 'First Time' Award
- Man Who Cut Kabali: Praveen
- 2.O - Photos
- 2.O - Videos
- Kabali
- Kabali | The unsolved secrets of Tamil cinema - Slideshow
- Kabali | Tamil films with possible sequels - Slideshow
- Kabali | List of movies spoofed in Tamizh Padam 2 movie - Part 1 - Slideshow
- Kabali | Deleted scenes from popular Tamil films - Slideshow
- Kabali | These films had no climax - Slideshow
- Kabali | South Indian Films which drew entire nation's attention - Slideshow
- Kabali | Top 10 biggest openers in Kerala - It features 5 Tamil films! - Slideshow