''SPB-க்கு இவரிடம் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது.!!" - வாட்சப் தகவல்.. பாடகி வெளியிட்ட வீடியோ.
முகப்பு > சினிமா செய்திகள்பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா வைரஸ் பரவியதன் காரணம் இவர்தான் என பரவிய வாட்சப் செய்தி குறித்து பாடகி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே கடந்த ஆகஸ்ட்-14 ஆம் தேதி, எஸ்.பி.பியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியானது. இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்காக, நேற்று பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும், வீடுகளில் கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா வைரஸ் பரவ காரணம் இவர்தான் என தெலுங்கு சூப்பர் சிங்கர் பாடகி மாளவிகாவை குறிப்பிட்டு வாட்சப் செய்திகள் பரவின. இதையடுத்து பாடகி மாளவிகா இதுகுறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ''ஊரடங்கு போடப்பட்டது முதலே நாங்கள் சமூக விலகலை கடைபிடித்து வருகிறோம். எங்கள் வீட்டில் இரண்டு வயது குழந்தை இருக்கிறது. நாங்கள் பாதுகாப்பாகவே இருந்து வந்தோம். ஆனால் அன்றைய ஷோவுக்கு வந்த எஸ்.பி.பி சார் உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் வந்த விஷயம் தெரிந்த பின்னரே, நானும் டெஸ்ட் எடுத்து பார்த்தேன். எனக்கும் பாசிட்டீவ் என வந்தது, எனது அப்பா, அம்மா மற்றும் குழந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனது அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் கடினமான காலத்தில் இருக்கிறோம். தயவு செய்து பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள். மேலும் சைபர் க்ரைமில் இதுகுறித்து புகாரளித்துள்ளேன். அதனால் இந்த தவறான செய்தியை வாட்சப் மூலம் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
''SPB-க்கு இவரிடம் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது.!!" - வாட்சப் தகவல்.. பாடகி வெளியிட்ட வீடியோ. வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- After Testing Positive For Covid 19, An Emotional Singer Malavika Gives Clarity On Rumours About SPB And Her Health
- SPB Charan Shares Latest Update On SP Balasubrahmanyam's Health Condition | பாடகர் எஸ்பிபியின் உடல் நிலை குறித்து அவரது மகன் உருக்கம்
- SPB Charan’s Latest Emotional Statement On Dad SPB’s Health
- After Popular Director Testst Positive For Coronavirus, He Shares Pregnant Wife Actress's Test Result | தனது கர்ப்பமாக இருக்கும் மனைவியின் கொரோனா டெஸ்ட் ரிசல்
- Popular Actor Tested Negative For Coronavirus Ft Karunas | கொரோனாவில் இருந்து வந்தார் நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ்
- Rajinikanth's Video Message For SPB SP Balasubramaniyam Critical Due To Corona
- Ilayaraja’s Emotional Statement On SPB’s Health Condition
- Latest Shocking Health Update Of Singer SPB, Remains Critical And Moved To ICU
- Popular Actress Tested Positive For Coronavirus Ft Nikki Galrani | பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ரானிக்கு கொரோனா பாதிப்பு
- Actress Nikki Galrani Tests Positive For CoronaVirus Shares Note
- RX 100 Director Ajay Bhupathi Tested Postive For Coronavirus | கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆர்எக்ஸ் 100 இயக்குநர் அஜய் பூபதி
- Another Legend Dies Due To Coronavirus Complications; Tributes Pour In Ft Trini Lopez
தொடர்புடைய இணைப்புகள்
- Breaking: தமிழ்நாடு Governor-க்கு கரோனா! அமித் ஷாக்கும் உறுதி!
- உங்களலாம் அப்படி கூப்பிடணுமா ? இதோட நிறுத்திக்கோங்க ! - கடும் கோபத்தில் S. P. Balasubrahmanyam !
- Lockdown போட்டாலும் Case குறைவதே இல்ல ஏன் Sir? - Sumanth C Raman பளீச் பேட்டி
- கரோனாவால் Ventilator நிலைக்கு போனால் உயிருக்கு ஆபத்தா? - Microbiologist Dr Bagyaraj பேட்டி
- 'என்னை பேச விடுங்க Immanuel.. பணம் நெருக்கடி ஏன் வருது?'- Anand Srinivasan சரமாரி கேள்வி - Interview
- விரட்டி விரட்டி வெளுக்க தோணுது... சினிமா பாணியில் அடித்து துவைத்த Police
- Can Eating Garlic And Ginger Protect You From Virus?
- Is Using Of Sanitizer As Effective As Handwash?
- Does Coronavirus Affects Only Elderly People?
- Can Alcohol Consumption Help?
- Is Meat And Poultry Products Unsafe?
- Common Myths & Facts About Coronavirus; Get Your Doubts Cleared!