தனக்கு கொரோனா பாதித்த நிலையில், மனைவியின் டெஸ்ட் ரிசல்டை பகிர்ந்து இயக்குநர் உருக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்உலகெங்கும் கொரோனா வைரஸினால் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதாரா ரீதியானா பாதிப்புகள் என உலகையே மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் வர இன்னும் காலம் பிடிக்கும் என்ற நிலையில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஒரு சிலர் உயிரிழந்தாலும் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என கொரோனாவால் பாதித்து மீண்டு வருவது மக்களுக்கு சற்றே ஆறுதல் அளித்து வருகிறது. இசையுலகில் சக்கரவர்த்தியாக விளங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டு வருவார் என்பது ஒட்டு மொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் இயக்குநர் நடிகருமான ராஜ் சக்ரபோர்டி சமீபத்தில் தனக்கு கொரோனா பாதித்துள்ளதாகவும் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தனது தந்தை கொரோனா பாதிப்பு இல்லை எனவும் ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரது குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் பரிசோதனை முடிவுகள் அவருக்கு கிடைத்துள்ளதாம். நடிகையும் அவரது மனைவியுமான சுபஸ்ரீ கங்குலி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Good news: Subhashree and everyone else in the family has tested negative for COVID-19. Makes me feel relieved. I'm totally fit and taking care of myself. We are all in seperate rooms. Thank you so much for your well wishes.
— Raj chakraborty (@iamrajchoco) August 18, 2020