www.garudabazaar.com

''அப்பாவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்ல'' - வீடியோவில் கண் கலங்கிய பாடகர் SPB மகன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாவில் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு மருத்துவர்கள் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.சரண் அவ்வப்போது அப்டேட் வழங்கி வருகிறார்.

SPB Charan shares latest update on SP Balasubrahmanyam's health condition | பாடகர் எஸ்பிபியின் உடல் நிலை குறித்து அவரது மகன் உருக்கம்

இதன் ஒரு பகுதியாகி திரையுலக நட்சத்திரங்கள் பலரும் எஸ்.பி.பி உடல் நலம் பெறவேண்டி இன்று (20/08/2020) மாலை 6 மணி முதல் 6.05 மணிக்கு கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதில், இசைஞானி இளையராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பிரார்த்தனையில் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் எஸ்.பி.பி சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் தனது அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றமும் இல்லை எனவும், பிரார்த்தனையும் நம்பிக்கையும் அவரை விரைவில் குணமாக்கும் என்றார். மேலும் திரையுலகினர் ஏற்பாடு செய்திருக்கும் கூட்டுப்பிரார்த்தனைக்கு அவர் நன்றி சொல்ல வார்த்தை இல்லை எனவும் தலை வணங்குகிறோம் என்று கூறி கண்கலங்கினார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A big thank you for the mass prayers.

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

SPB Charan shares latest update on SP Balasubrahmanyam's health condition | பாடகர் எஸ்பிபியின் உடல் நிலை குறித்து அவரது மகன் உருக்கம்

People looking for online information on SP Balasubrahmanyam, SPB, SPB Charan will find this news story useful.