கொரோனா அச்சத்தில் மக்கள் இருக்க, ஏ.ஆர்.ரஹ்மான் முக்கிய அறிவிப்பு - 'இந்த கஷ்டமான நேரத்துல...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, இசையமைத்து, தயாரித்துள்ள படம் '99 சாங்ஸ்'. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதி விஸ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.  இந்த படத்தினை ஏ.ஆர்.ரஹ்மானின் ஒய்.எம்.மூவிஸ் நிறுவனத்துடன் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானின் 99 சாங்க்ஸ் பாடல்கள் மார்ச் 20 ஆம் தேதி வெளியாகிறது | AR Rahman's 99 Movie songs will release on March 20

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கொரோனா விவகாரம் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்,

அதில், ''இந்த கஷ்டமான நேரத்தில் உங்களை உற்சாகப்படுத்த ஒரு அறிவிப்பு .99 படத்தின் பாடல்கள் அனைத்தும் வருகிற மார்ச் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த ஆல்பமில் 14 பாடல்கள் உள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

'பிகில்' படத்துக்கு பிறகு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில், விக்ரம் நடிக்கும் 'கோப்ரா', சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில் 'கோப்ரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Entertainment sub editor