Cadaver D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

மா துஜே சலாம்.. ரஹ்மானின் Throwback வீடியோவை பகிர்ந்த நடிகை.. சிலிர்த்துப்போன ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழம்பெரும் நடிகையான சிமி கரேவால், 'மா துஜே சலாம்' பாடலை ஏஆர் ரஹ்மான் பாடும் பழைய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Simi Garewal shares video AR Rahman singing Maa Tujhe Salaam

Also Read | PONNIYIN SELVAN PS1: முதல்முறையாக தமிழ் சினிமாவில்.. "பொன்னியின் செல்வன்" தரவிருக்கும் மாஸ் சர்ப்ரைஸ்!

75வது சுதந்திர தின விழா

இந்தியாவில் நேற்று 75வது சுதந்திர தின விழா நேற்று விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்தியா முழுவதும் பல்வேறு கலை நிகழ்சிகள் நடத்தப்பட்ட நிலையில், முதன் முறையாக ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் மூவர்ண கொடியை ஏற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மக்கள் தங்களது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.

Simi Garewal shares video AR Rahman singing Maa Tujhe Salaam

வைரல் வீடியோ

நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் புகழடைந்தவர் சிமி கரேவால். இவர் இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில், இசைப்புயல் ஏஆர் ரஹ்மானை அவர் பேட்டி எடுத்த பழைய வீடியோ ஒன்றை தற்போது தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் ஏஆர் ரஹ்மான் "மா துஜே சலாம்"  பாடலை பாடுகிறார். இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் இந்த throwback வீடியோவை அவர் பகிர்ந்திருக்கிறார்.

Simi Garewal shares video AR Rahman singing Maa Tujhe Salaam

சிமி கரேவால் தனது பதிவில்,"அவருடைய குரலில் உள்ள பக்தியை.. குரலின் தீவிரத்தை கேளுங்கள்.. ஏஆர் ரஹ்மான் நமக்காக பாடுகிறார். சுதந்திர தின விழா வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏஆர் ரஹ்மானின் இசையில் அவரே பாடிய இந்த பாடல் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியானது. பல வருடங்கள் கழிந்த பின்னரும் இந்த பாடல் இன்னும் ரசிகர்களிடையே முணுமுணுக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் சிமி கரேவால்-ன் இந்த பதிவை இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் RPG குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் வர்தன் கோயங்கா ரீ-ட்வீட் செய்திருக்கிறார். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் இந்த பாடலை பற்றியும், ஏஆர் ரஹ்மானின் குரலையும் சிலாகித்து வருகின்றனர்.

 

Also Read | 47 Years of Rajinism : “கடவுளின் குழந்தை நீங்க...” - ரஜினிக்கு மகள்கள் வாழ்த்து.. Viral Pics

தொடர்புடைய இணைப்புகள்

Simi Garewal shares video AR Rahman singing Maa Tujhe Salaam

People looking for online information on AR Rahman, AR Rahman Throwback singing video, Maa Tujhe Salaam song, Simi Garewal will find this news story useful.