Watch Video! பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகெனின் வைரல் Song லைவ் Performance
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 08, 2019 02:10 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முகென் ராவ் பாடி இணையத்தில் படு வைரலான பாடலை Behindwoods Gold Mic Music Awards-ல் சௌந்தர்யா கொடுத்த லைவ் Performance வீடியோ வெளியாகியுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த முகென் ராவ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேக் சீட்டர், பேர் சொல்லும் பிள்ளை என பல்வேறு கருத்து சர்ச்சையில் சிக்கிய முகென், நிகழ்ச்சியின் இறுதி எபிசோட்களில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி போட்டியிலும், மக்கள் மனதிலும் முன்னேறினார்.
டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்குகளில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றதுடன், பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலையும் தட்டிச் சென்றார். இவர் ஃபைனல்ஸ்கு முன்பாக பிக் பாஸ் வீட்டில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மணி பேண்ட் உடன் பாடல் ஒன்றை பாடினார். ‘சத்தியமா நான் சொல்லுறேன்டி’ என்ற பாடல் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு செம வைரலானது.
இசை ஆளுமைகளை கவுரவிக்கும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற Behindwoods Gold Mic Music Awards-ல் பாடகி சௌந்தர்யா மற்றும் செண்பகராஜ் ஆகியோர் இணைந்து லைவ் Performance ஆக கொடுத்தனர். அதன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
WATCH VIDEO! பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகெனின் வைரல் SONG லைவ் PERFORMANCE வீடியோ