Beast Others
www.garudabazaar.com

வெந்து தணிந்தது காடு.. தலைவன் சிம்புவுக்கு வழிய விடு.. புதிய போஸ்டருடன் GVM கொடுத்த சூப்பர் Update!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Shooting Wrapped up

Also Read | போடு! சொந்த கிராமத்துல புது வீடு .. பால் காய்ச்சிய நடிகர் சிவகார்த்திக்கேயன்..! செம

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். ‘வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Shooting Wrapped up

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரகுமான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இணைந்துள்ளது.

Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Shooting Wrapped up

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் திருச்செந்தூரில் ஆரம்பமானது. பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடந்து வந்தது. பின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது.

Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Shooting Wrapped up

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிப்பதாக  சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்தது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. கடைசியாக சிம்பு பிறந்தநாளுக்கு இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.

Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Shooting Wrapped up

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக படக்குழு சார்பில் இயக்குனர் கௌதம் மேனன் அறிவித்துள்ளார்.  அதில், "படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின் தயாரிப்பு ஆரம்பமாகியுள்ளது. மீண்டும் பள்ளிக்குச் சென்று மேலும் சிலவற்றைக் கற்றுக்கொள்வது போல் இருந்தது. இந்தப் பயணத்தில் உறுதியுடன் பயணித்த மற்ற அனைத்து சிறந்த நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி." என கூறியுள்ளார். சிம்புவும் இந்த போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

Also Read | அடடே.‌.விஜய்யின் தளபதி 66 படம் இந்த மாதிரி படமா? போட்டுடைத்த இயக்குனர் வம்சி!

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Shooting Wrapped up

People looking for online information on Gautham Vasudev Menon, SilambarasanTR, Venthu Thaninthathu Kaadu, Venthu Thaninthathu Kaadu Updates will find this news story useful.