Beast Others
www.garudabazaar.com

அடடே.‌.விஜய்யின் தளபதி 66 படம் இந்த மாதிரி படமா? போட்டுடைத்த இயக்குனர் வம்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் 66 வது படம் பற்றி இயக்குனர் வம்சி மனம் திறந்துள்ளார்.

Actor Vijay Thalapathy 66 Movie Latest Update from Vamsi

Also Read | புத்தாண்டு போட்டோ ஷூட்... பட்டுப்புடவையில் அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட HOT வைரல் போட்டோஸ்..

கடந்த ஆண்டு சமீபத்தில் தான், இவரது அடுத்த படம் - தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actor Vijay Thalapathy 66 Movie Latest Update from Vamsi

சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் இணைந்துள்ளார். விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் இவர் தான். வமசியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார்.

Actor Vijay Thalapathy 66 Movie Latest Update from Vamsi

இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய உள்ளார். தில் கார்த்திக் பழனி பென்குயின், ஆடிபுருஷ் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். கார்த்திக் பழனி மெர்குரி (2018) மற்றும் பேட்ட (2019) ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளர் திருவின் உதவியாளராக பணியாற்றினார். பல ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றினார்.

Actor Vijay Thalapathy 66 Movie Latest Update from Vamsi

இந்நிலையில் விஜய் 66 படத்தின் அப்டேட்டை வம்சி அளித்துள்ளார். அதில், தளபதி 66 படம் பற்றி சொல்ல பயமா இருக்கு, முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும், இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்" என்றும் கூறியுள்ளார்.

Actor Vijay Thalapathy 66 Movie Latest Update from Vamsi

Also Read | போடு! சொந்த கிராமத்துல புது வீடு .. பால் காய்ச்சிய நடிகர் சிவகார்த்திக்கேயன்..! செம

அடடே.‌.விஜய்யின் தளபதி 66 படம் இந்த மாதிரி படமா? போட்டுடைத்த இயக்குனர் வம்சி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay Thalapathy 66 Movie Latest Update from Vamsi

People looking for online information on Thalapathy 66 Movie Latest Update, Thalapathy 66 Movie, Vamsi, Vijay will find this news story useful.