COBRA D Logo Top
www.garudabazaar.com

உலகின் விலையுயர்ந்த சொகுசு காரில் மாஸாக நடிகர் சிம்பு.. 'VTK' படத்தின் புதிய போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய போஸ்டரை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Movie New Poster with Jaguar XJL 2011

Also Read | அஜித் பட தயாரிப்பாளருடன் இணைந்த பவன் கல்யாண்.. வெளியான புதிய படத்தின் கொலமாஸ் தமிழ் டீஸர்!

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Movie New Poster with Jaguar XJL 2011

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.  இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Movie New Poster with Jaguar XJL 2011

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். இந்நிலையில் முத்து கதாபாத்திரத்தின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டு புதிய போஸ்டரை படக்குழு சார்பில் படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. உலகின் விலையுயர்ந்த சொகுசு காரான Jaguar XJL 2010 ரக காரில் இருந்து இறங்கி சிம்பு நடந்து செல்லும் புகைப்படம் இடம் பெற்றுள்ள போஸ்டராக புதிய போஸ்டர் அமைந்துள்ளது.

Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Movie New Poster with Jaguar XJL 2011

இந்த போஸ்டரில் சிவப்பு நிற கோட் சூட் உடையில் நவநாகரீக தோற்றத்தில் சிம்பு தோன்றியுள்ளார். முகத்தில் தாடி இருப்பது பக்கவாட்டில் தெரியும் படி சிம்புவின் லுக் அமைந்துள்ளது.

Also Read | மலையாளத்தில் அறிமுகமாகும் தமன்னா.. ஹீரோ இவரா? மியூசிக் டைரக்டர் யாரு? செம்ம

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Movie New Poster with Jaguar XJL 2011

People looking for online information on Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu, Venthu Thaninthathu Kaadu Movie New Poster will find this news story useful.