'நாடு அழிவை நோக்கி பயணிக்கும் ஒருவரின் தலைமையை கொண்டுள்ளது' - நடிகர் சித்தார்த் டிவிட்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 07, 2019 10:06 AM
2019 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5 ஆம் தேதி,காஷ்மீர் மீதான சிறப்பு அந்தஸ்து தரும் பிரிவு 370 ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
நடிகர் சித்தார்த் இது குறித்து கூறுகையில், 'நாடு அழிவை நோக்கி பயணிக்கும் ஒருவரின் தலைமையை கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை முற்றிலும் திசை திருப்பும் வேலையாகும். இதையெல்லாம் தெரிந்து கொண்டே தான் செய்கின்றார்கள்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் காஷ்மீர் குறித்த நடவடிக்கைக்கு ஆதரவாக பலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், தொடர்ந்து இதற்கு எதிர்ப்பாகவும் சிலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#India is clearly in the hands of a master of distraction and a master of destruction. One has to give in to the fact that they are both masters and know exactly what they are doing.
— Siddharth (@Actor_Siddharth) August 6, 2019