32 வருடம் கழித்து கோலிவுட்டில் செம சம்பவம்.! சிபிராஜ்-விக்ரம் பிரபு இடையே என்ன ஒரு ஆச்சர்யம்.!
முகப்பு > சினிமா செய்திகள்இன்று விக்ரம் பிரபுவின் அசுரகுரு படமும் சிபிராஜின் வால்டர் படமும் ரிலீஸ் ஆவதையடுத்து, அதுகுறித்து ஒரு செம ஸ்பெஷலான விஷயம் இது.
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரகுரு. மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தை ராஜ்தீப் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இன்று வெளியானது. அதே போல இன்று வெளியாகியுள்ள மற்றொரு திரைப்படம் வால்டர். சிபிராஜ் நடித்துள்ள இத்திரைப்படத்தை அன்பு இயக்கியுள்ளார். இரண்டு இளம் கதாநாயகர்களின் படம் ஒரே நாளில் வெளியாகும், நிலையில் மற்றுமொரு சுவாரஸ்யமான நிகழ்வு தெரிய வந்துள்ளது.
சிபிராஜின் அப்பா சத்யராஜ் நடித்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு திரைப்படம் 1988-ஆம் வருடம் ஏப்ரல் 15 அன்று வெளியானது. அதே தேதியில் தான் பிரபு நடித்த அக்னி நட்சத்திரம் படமும் வெளியானது. சுமார் 32 ஆண்டுகளுக்கு பிறகு அதே போல, இருவரின் மகன்களின் படமும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படி 1988-ல் இரண்டு படமும் ரசிகர்களை கவர்ந்ததோ, அதே போல வால்டர் மற்றும் அசுரகுரு படமும் ரசிகர்களை கவரும் என நம்பலாம்.
@iamVikramPrabhu@Sibi_Sathyaraj
15 April 1988
அக்னி 🔥 நட்சத்திரம்✨
என் பொம்முக்குட்டி 🎎
அம்மாவுக்கு 🤱
இந்த இரு திரைப்படம் ஓரே நாளில் திரையிடப்பட்டது வெற்றி பெற்றது.
32 ஆண்டுகள்📅 கழித்து அவர்களின் இளவரசர்கள்🤴
திரைப்படம்
அசரகுரு
வால்டர்
🌻வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌻 pic.twitter.com/E41n4W3WUD
— Shanmuga Subramanian (@shanmugamsv4) March 13, 2020