''ஜோதிகா பேசியது. அநாகரிகமாக ... இது வெறுப்பு அரசியலின் சாதனை'' - பிரபல தயாரிப்பாளர் கோபம்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை ஜோதிகா சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கோவில்களை சுத்தமாக பராமரிக்க செலவு செய்கிறோம், ஆனால் மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது. கோவில்கள விட மருத்துவமனைகளும் பள்ளிக்கூடங்களும் முக்கியம் என்று பேசினார்.
ஜோதிகாவின் பேச்சுக்கு ஒரு பக்கம் ஆதரவும் மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பின. மேலும், ஜோதிகாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதங்களை ஏற்படுத்தின. பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ''ராட்சசி' படத்தில் பேசிய வசனத்தின் பொருளை நேரில் உணர்ந்த #ஜோதிகா அண்ணி, அப்படத்திற்காக விருது வழங்கப்பட்ட பொழுது பேசியது அரைகுறை அர்த்தம் கண்டு அநாகரீகமாக சில அன்பர்களால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல கருத்தை நாடறியச் செய்வதே உங்கள் வெறுப்பு அரசியலின் சாதனை.வேறென்ன சொல்ல'' என்று பதிவு செய்துள்ளார்.
#Raatchasi படத்தில் பேசிய வசனத்தின் பொருளை நேரில் உணர்ந்த #ஜோதிகா அண்ணி, அப்படத்திற்காக விருது வழங்கப்பட்ட பொழுது பேசியது அரைகுறை அர்த்தம் கண்டு அநாகரீகமாக சில அன்பர்களால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல கருத்தை நாடறியச் செய்வதே உங்கள் வெறுப்பு அரசியலின் சாதனை.வேறென்ன சொல்ல😀
— S.R.Prabhu (@prabhu_sr) April 24, 2020