RRR Others USA
www.garudabazaar.com

முத்தம் கொடுத்து ஸ்ருதி ஹாசனை வெக்கப்பட வைத்த காதலர்… வைரல் video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய காதலரின் பிறந்தநாள் வீடியோவில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Shruthi haasan boyfriend birthday party kiss video

#KVRK BTS pic : “இது சாத்தியமானதுக்கு கடவுளுக்கு நன்றி”… விக்னேஷ் சிவன் நெழ்ச்சி!

இசையும் நடிப்பும்…

சிறுவயது முதலே சினிமாவில் சில பாடல்களைப் பாடியுள்ள ஸ்ருதிஹாசன், வெளிநாட்டில் இசை பற்றிய படிப்பை முடித்து இந்தியா திரும்பினார். அதன் பின்னர் அவர் இந்தியில் லக் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். தமிழில் முதன் முதலில் உன்னைப் போல் ஒருவன் படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையானார். தொடர்ந்து தனுஷ், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களோடு தொடர்ந்து நடித்தார். கடைசியாக தமிழில் விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்தார்.

Shruthi haasan boyfriend birthday party kiss video

கொண்டாடிய தெலுங்கு திரையுலகம்…

தமிழைப் போலவே தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன் அங்கு முன்னணி நடிகையானார். தெலுங்கில் அதிக வெற்றிப் படங்களைக் கொடுத்த அவர் அங்கே ரசிகர்கள் கொண்டாடப்படும் நாயகியாக வலம் வருகிறார்.  இப்போது தெலுங்கில் சலார், சிரஞ்சீவி 157 மற்றும் பாலகிருஷ்ணா 107 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஸ்ருதிஹாசனின் காதல்…

லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்ற மேடை நாடக நடிகரை ஸ்ருதிஹாசன் காதலித்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வந்தார். ஒரு கட்டத்தில்  இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2019ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

Shruthi haasan boyfriend birthday party kiss video

அதையடுத்து சிங்கிளாக இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்ற இல்லூஸ்ட்ரேட் கலைஞரைக்  காதலித்து வருகிறார். இவர் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் டூடுல் கலைஞராவார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

பிறந்தநாள் வீடியோ…

இந்நிலையில் தற்போது சாந்தனுவின் பிறந்தநாள் பார்ட்டியில் ஸ்ருதிஹாசன் கலந்துகொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அதில் சாந்தனு கேக் வெட்டி ஸ்ருதிஹாசனுக்கு ஊட்டிவிட்டு பின்னர் அவருக்கு முத்தம் கொடுக்கிறார். மீண்டும் ஒருமுறை முத்தம் கொடுக்க ஸ்ருதிஹாசன் வெக்கப்பட்டு சிரிக்கிறார். பின்னர் ஸ்ருதிஹாசன் தனது காதலருக்கு கேக் ஊட்டிவிட நண்பர்கள் அனைவரும் கைதட்டி கொண்டாடுகின்றனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

தி வெய்ட் ஈஸ் ஓவர்… வந்தாச்சு கேம் ஆஃப் த்ரோன்ஸ் 2வது part…. ரிலீஸ் தேதி இதான் – viral pic!

 

தொடர்புடைய இணைப்புகள்

Shruthi haasan boyfriend birthday party kiss video

People looking for online information on Birthday Party, Shruthi Haasan, Shruthi haasan boyfriend birthday party will find this news story useful.