RRR Others USA
www.garudabazaar.com

தி வெய்ட் ஈஸ் ஓவர்… வந்தாச்சு கேம் ஆஃப் த்ரோன்ஸ் 2வது part…. ரிலீஸ் தேதி இதான் – viral pic!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸின் அடுத்த பாகம் ஹவுஸ் ஆஃப் ட்ராகன் உருவாகி வருகிறது.

Game of thrones second part will release on aug 2022

#KVRK BTS pic : “இது சாத்தியமானதுக்கு கடவுளுக்கு நன்றி”… விக்னேஷ் சிவன் நெழ்ச்சி!

கேம் ஆஃப் த்ரோன்ஸ்….

தொலைக்காட்சி தொடர்களின் வரலாற்றில் பிரேக்கிங் பேட் தொடருக்கு நிகரான ரசிகர்களைப் பெற்ற தொடர் கேம் ஆஃப் த்ரோன்ஸ். மொத்தம் 7 சீசன்களாக HBO வில் வெளியான இந்த தொடர் சமீபத்தில் நிறைவுற்றது. இந்த சீசனின் கடைசி தொடரை தொலைக்காட்சியில் பார்த்தவர்களின் எண்ணிக்கை இதுவரை வேறு எந்த தொடருக்கும் இல்லாத எண்ணிக்கையாக அமைந்தது.

Game of thrones second part will release on aug 2022

கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஸ்டார்ஸ்

இந்த தொடரில் நடித்த அனைவரும் இப்போது உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களைக் கவர்ந்த ஸ்டார்ஸ் ஆகிவிட்டனர். இந்த தொடருக்காக குழந்தையில் இருந்து பதின் பருவம் வரை நடித்த சோபி டர்னர், மற்றும் மைசி வில்லியம்ஸ் ஆகியோர் இப்போது ஹாலிவுட்டில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். அதுபோலவே பீட்டர் டிங்க்ளேஜ் மற்றும் லீனா ஹெட்டே, எமிலியா கிளார்க், நிக்கோலஜ் கோஸ்டர் வல்லாடு ஆகியோர் உலகம் முழுவதும் அறியப்பட்ட திரை நட்சத்திரங்களாக உள்ளனர்.

Game of thrones second part will release on aug 2022

மீண்டும் வரும் ஹவுஸ் ஆஃப் ட்ராகன்ஸ்…

கேம் ஆஃப் த்ரோன்ஸின் கடைசி சீசனில் மதர் ஆஃப் டிராகன் டனேரிஸ் டார்காரியன் கொல்லப்படுவதோடு முடிந்தது. இதையடுத்து இப்போது அதன் ஸ்பின் ஆஃப் ஆன ஹவுஸ் ஆஃப் ட்ராகன் அடுத்த பாகமாக உருவாகி வருகிறது. முந்தைய பாகத்தை தயாரித்த HBO நிறுவனமே இந்த தொடரையும் தயாரிக்கிறது. முதல் பாகத்தில் இருந்த நடிகர்கள் இல்லாமல் முற்றிலும் புதிய குழுவோடு ஹவுஸ் ஆஃப் ட்ராகன் உருவாகிறது.

Game of thrones second part will release on aug 2022

உலகம் முழுக்க எதிர்பார்ப்பு….

இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ள GOT ரசிகர்களிடையே உள்ள நிலையில் இப்போது ரிலீஸ் தேதியை HBO அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இதன் முதல் பாகம் முதல் எபிசோட் HBO வில் வெளியாகிறது. அதையடுத்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது. இது சம்மந்தமான அறிவிப்பை HBO வெளியிட இப்போது அது வைரல் ஆகி வருகிறது.

Game of thrones second part will release on aug 2022

People looking for online information on Game of Thrones, Game of thrones latest updates, Game of thrones second part, House of the Dragon will find this news story useful.