RRR Others USA
www.garudabazaar.com

#KVRK BTS pic : “இது சாத்தியமானதுக்கு கடவுளுக்கு நன்றி”… விக்னேஷ் சிவன் நெழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

Vijaysethupathi nayanthara Samantha latest KVRK bts viral pic

அடடே …ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மியூசிக் ஆல்பமா? இவங்களும் இருக்காங்களா? மாஸ் update!

மீண்டும் இணைந்த நானும் ரவுடிதான் கூட்டணி…

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இந்த படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார். ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டைட்டானிக் போஸ்டர் ஆகியவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Vijaysethupathi nayanthara Samantha latest KVRK bts viral pic

வெளியான பாடல்கள்…

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ”டு டுட்டு” அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து வெளியான 'நான் பிழை' பாடலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. பின்னர் வெளியான இந்த படத்தின் டீசர் காட்சிகளும் இணையத்தில் நல்ல கவனத்தைப் பெற்றன. குறிப்பாக விஜய் சேதுபதி சமந்தா மற்றும் நயன்தாரா ஆகிய இருவரிடமும் மாறி மாறி பேசும் காட்சி மீம்களாக இப்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.

Vijaysethupathi nayanthara Samantha latest KVRK bts viral pic

நயன்தாராவும் சமந்தாவும்…

இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இந்த படத்தின் படப்பிடிப்பு தளப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் படக்குழுவினர் அனைவரும் சூழ, நயன்தாரா சமந்தாவுக்கு கேக் ஊட்டி விடுகிறார். இந்த புகைப்படத்தோடு ‘இதை சாத்தியமாக்கிய கடவுளுக்கு நன்றி. அசாத்திய திறமையாளர்களோடு பணிபுரிந்துள்ளேன். அசாதாரணமான நடிகர்கள் எப்போதும் ஒரு இயக்குனரின் கனவுதான். இதைவிட ஒரு சிறந்த காம்பினேஷனை கேட்க முடியாது. சிறந்த நடிகரான விஜய் சேதுபதி, அழகான புரொபஷனலான நயன்தாரா,  திறமைவாய்ந்த சமந்தா… இவர்கள் அனைவரும் இந்த படத்தை மிகச் சிறப்பாக எடுத்து வந்துள்ளனர். இவர்களை ஒன்றினைத்தது நினைத்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன். இந்த படத்தின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நீண்ட நாட்களுக்கு என் மனதில் இருக்கும். அனைவருக்கும் நன்றி’ எனக் கூறியுள்ளார்.

“அவர் மேல மதிப்பு வச்சிருக்கேன்”… மூத்த நடிகரைப் பற்றி கூறிய யோகி பாபு! இயக்குனரின் viral tweet!

தொடர்புடைய இணைப்புகள்

Vijaysethupathi nayanthara Samantha latest KVRK bts viral pic

People looking for online information on Kaathu Vaakula Rendu Kadhal, KVRK, KVRK Latest update, Nayanthara, Samantha, Vignesh shivan, Vijaysethupathi will find this news story useful.