www.garudabazaar.com

Shruthi Haasan Birthday: "ஹேப்பி பர்த்டே.. ஸ்ருதி மேம்!".. கைகள் மாற்றுத்திறனாளி பெண்ணின் சர்ப்ரைஸ் ‘ஓவியம்’!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Shruthi Haasan: பிரபல தென்னிந்திய முன்னணி இளம் நடிகையும், நடிகர் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் ஜனவரி 28-ஆம் தேதியில் தமது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

both hand disabled girl draws Shruthi Haasan Birthday wishes

நடிகை ஸ்ருதி ஹாசன்

தமது இந்த பிறந்த நாளில், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் அனைவருக்கும் நன்றிக்கடன் படுகிறேன், மிகவும் நேசிக்கப்படுகிறேன், என் வாழ்வில் மேலும் ஓராண்டு கடந்துவிட்டது.. எனக்கு இன்னும் கற்க, பார்க்க, நேசிக்க பல விஷயங்கள் உள்ளன.

என்னைச் சுற்றி யதார்த்தவாதிகள் உள்ளனர். அவர்களிடம் நேரிலும் இணையவழியிலும் எல்லோரிடம் கற்கிறேன்.  அவர்களின் அன்பு எப்போதும் வழி நடத்தும்.... அனைவருக்கும் நன்றி” என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதிஹாசனுக்கு மாற்றுத்திறனாளியின் வாழ்த்து

இந்நிலையில்தான், ஆந்திராவின், ஸ்ரீககுளம் மாவட்டத்தைச் சேர்ந்த வரைகலைஞர் ஸ்வப்னிகா, நடிகை ஸ்ருதிஹாசனை தத்ரூபமாக வரைந்துள்ளார். ஆனால் வரைகலைஞர் ஸ்வர்ப்னிகா, இரு கைகளையும் பயன்படுத்தி வரைய இயலாதா மாற்றுத்திறனாளி. இத்தனை அன்புடன் நடிகை ஸ்ருதிஹாசனின் ஓவியத்தை வரைந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை உரித்தாக்கியுள்ளார்.

Also Read: "100 தடவை விழுந்தேன்!.. விட்டுட்டு போய்டலானு நெனைச்சேன்!".. "இது ஆரம்பம் தான்"..  பனிச்சறுக்கு குறித்து நடிகை சமந்தா! வீடியோ

பல்வேறு ஓவியங்களை வரைந்து வரும் ஸ்வப்னிகா, அவ்வப்போது தமது ரீல்ஸ் வீடியோக்களின் மூலம் ட்ரெண்டிங்கான பாடல்களுக்கும், வசனங்ளுக்கும் பெர்ஃபார்ம் செய்துள்ளதையும் காண முடிகிறது. தவிர பரீட்சாத்திய முறையிலான புதுமையான ஓவியங்களையும் ஸ்வப்னிகா முயற்சி செய்துள்ளார்.

ஸ்வப்னிகாவுக்கு வாழ்த்து

அந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹாசனின் இன்றைய பிறந்த நாளுக்கு அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தாமும் தமது வாழ்த்துக்களை, தன்னுடைய மொழியான ஓவியத்தின் மூலம் வரைந்து தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும் தன்னம்பிக்கையுடன் ஓவியங்களை வரைந்து வரும் ஸ்வப்னிகாவை பலரும் பாராட்டி வருவதுடன், அவருடைய எதிர்காலத்துக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அமேசான் சீரிஸ்

பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் தற்போது, அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடியில் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி Best Seller எனும் சீரிஸ் ரிலீஸ் ஆகி ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த சீரிஸ் ரிலீஸை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: 'பத்மஶ்ரீ' சவுக்கார் ஜானகி! மறக்க முடியாத எத்தனை 100 படங்கள்! நடிகர்கள் சார்பில் நாசர் வாழ்த்து!

both hand disabled girl draws Shruthi Haasan Birthday wishes

People looking for online information on Shruthi Haasan, Shruthi Haasan Birthday will find this news story useful.