www.garudabazaar.com

சனமிடம் 'மன்னிப்பு' கேட்ட பாலாஜி... ரொம்ப லேட் 'டென்ஷனான' ஷிவானி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று தங்க சுரங்கம் டாஸ்க்கில் பிக்பாஸ் ஒரு திடீர் டிவிஸ்ட் வைத்தார். அதன்படி போட்டியாளர்கள் மூன்று குழுக்களாக பிரிய, அதில் அதிக தங்கத்தை வைத்திருந்த பாலாஜி-அர்ச்சனா குழுவினர் வெற்றி பெற்றனர். இதையடுத்து அவர்கள் அந்த வீட்டை ஆளலாம் என பிக்பாஸ் தெரிவித்தார். இந்த திடீர் அறிவிப்பால் உற்சாகமான பாலாஜி குழு அனிதா, ஷிவானி, ஆஜீத், சனம், நிஷா உள்ளிட்டோரை நியூஸ் சொல்லு, டான்ஸ் ஆடு, ஊட்டி விடு என தங்களது இஷ்டத்திற்கு ஆட்டுவித்தனர்.

Balaji Murugadoss given consolation for Sanam Shetty

டாஸ்க் முடிந்த பின்னும் ஷிவானி, பாலாஜிக்கு ஊட்டி கொண்டிருந்தது வேறு விஷயம். இதில் சனமிடம் முந்திரிக்கொட்டை மாதிரி முந்த மாட்டேன் என 10 முறை சொல்ல சொல்லி பாலாஜி சொன்னார். (எனக்கு 10 பாயிண்ட் சொல்லு என சனம் கேட்டதன் எதிரொலி போல) டாஸ்க் முடிந்து வெகுநேரம் கழித்து பாலாஜி இப்படி பண்ணிட்டானே என சனம் அழ அவருக்கு அனிதா ஆறுதல் கூறினார். அப்போது அந்த வழியாக வந்த பாலாஜி கண்ணில் இது பட்டது.

வீட்டுக்குள் வந்து சனம் அழுகுறாங்க யாராவது அவங்களுக்கு ஆறுதல் சொல்லுங்க என கேட்டு கொண்டிருந்த பாலாஜி பின்னர் சனமிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது அருகில் இருந்த ஷிவானி-கேப்ரியலா இருவரும் தனியே எழுந்து சென்று அதுகுறித்து விவாதம் செய்தனர். கேபி அமைதியாக இருக்க அப்பவே சொல்லி இருக்கணும் இவ்ளோ லேட்டா தான் தோணுதா? என்பது போல ஷிவானி டென்ஷன் ஆனார். இதைப்பார்த்த  ரசிகர்கள் ஏன் ஷிவானிக்கு இவ்ளோ கோபம் வருது? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Balaji Murugadoss given consolation for Sanam Shetty

People looking for online information on Balaji Murugadoss will find this news story useful.