சூப்பர் வுமனாக மாறிய ஷில்பா ஷெட்டி.. "Hollywood-க்கே Tough குடுப்பாங்க போலயே.." வைரலாகும் லேட்டஸ்ட் 'லுக்'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படத்தின் டிரைலர், தற்போது வெளியாகி அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

Shilpa shetty super woman look in nikamma trailer

Also Read | அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக்.. கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குனர் பா. ரஞ்சித்.. தெறிக்கவிடும் Photos.

ஷில்பா ஷெட்டி,  அபிமன்யு தஸானி மற்றும் ஷிர்லி சேட்டியா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'நிகம்மா'. ஹீரோபந்தி படத்தை இயக்கி இருந்த சபீர் கான், நிக்கம்மா திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ள நிலையில், இதில் ஷில்பா ஷெட்டியின் லுக் தான் இன்று இணையம் முழுக்க பேசு பொருளாக மாறி உள்ளது.

Shilpa shetty super woman look in nikamma trailer

சூப்பர் வுமனாக ஷில்பா ஷெட்டி

என்டர்டெயின்மென்ட் மற்றும் ஆக்ஷன் கலந்துள்ள இந்த டிரைலர், அபிமன்யு அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறது. சோம்பேறியாக இருக்கும் அவரின் காதல் காட்சிகள் இடம்பெற, டிரைலரின் பாதியில் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார் நடிகை ஷில்பா ஷெட்டி. சூப்பர் வுமன் வேடத்தில் வரும் ஷில்பா ஷெட்டி, நாயக அபிமன்யுவை வேலை வாங்கி, அவரை முற்றிலும் மாற்றுவது போல காட்சிகளும் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளது.

Shilpa shetty super woman look in nikamma trailer

ரசிகர்கள் கருத்து

சூப்பர் வுமனாக தோன்றி, பின்னர் நார்மலாக ஷில்பா ஷெட்டி வரும் நிலையில், அதன் பின்னர் ஆக்ஷன் பக்கம் திரும்புகிறது இந்த டிரைலர். சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த டிரைலர் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், குறிப்பாக ஷில்பா ஷெட்டி சூப்பர் வுமனாக தோன்றும் ஷாட் தான், பெரிய அளவில் வைரலாக மாறி உள்ளது.

Shilpa shetty super woman look in nikamma trailer

தான் சூப்பர் வுமன் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நேற்று ஷில்பா ஷெட்டி பகிர்ந்திருந்தார். தொடர்ந்து, அதே போல தற்போது டிரைலரில் வரும் காட்சிகள் பற்றியும், ஷில்பா ஷெட்டியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Shilpa shetty super woman look in nikamma trailer

People looking for online information on நிகம்மா, ஷில்பா ஷெட்டி, Nikamma trailer, Shilpa Shetty, Shilpa shetty super woman look will find this news story useful.