www.garudabazaar.com

‘செண்பகமே..’.. எத்தன வருஷம் ஆச்சு இவங்கள பாத்து.. இப்ப வேற மாரி எண்ட்ரி கொடுக்க போறாங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராமராஜன் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த திரைப்படம் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’.

shenbagame song fame shanthi priya starring in OTT Movie

இந்த திரைப்படத்தில் வரும் ‘செண்பகமே.. செண்பகமே’ பாடல் மிகவும் பிரபலம். பாட்டு பாடி பால் கறக்கும் கேரக்டராக ராமராஜன் இந்த படத்தில் நடித்திருப்பார். இதில் செண்பகம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் சாந்திப்பிரியா.

மிகவும் அரிதாக, தமிழ் படத்தில் நடித்த இவர், இந்திய மொழிகளில் நடித்துள்ளார். செண்பகமே, மதுர மரிக்கொழுந்து வாசம் ஆகிய பாடல்கள் மற்றும் இந்த பாடல்கள் இடம் பெறும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படம் மூலம், பலருக்கும் ஃபேவ்ரைட் நாயகியாக மாறியவர் சாந்திப்பிரியா.

shenbagame song fame shanthi priya starring in OTT Movie

குறிப்பாக 90S kids-களின் ஃபேவ்ரைட் நடிகையாக இருந்த சாந்திப்பிரியா இப்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார் என்று பலரும் அறியாமல் இருந்த நிலையில், தற்போது ஓடிடி மூலம் புதிதாக எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆம், பிரபல நடிகை பானுப்பிரியாவின் தங்கை தான் சாந்திப்பிரியா. அக்கா போலவே இவரும் தொடர்ந்து முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து, தமிழ் தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக மாறினார்.

shenbagame song fame shanthi priya starring in OTT Movie

நீண்ட காலமாக நடிப்பு துறையில் இருந்து விலகி இருந்த இவர், இப்போது  OTT மூலம் மீண்டும் நடிக்க  களமிறங்கியுள்ளார்.

செப்டம்பர் 22 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு, சமூக வலைத்தள பக்கத்தில் பலர் வாழ்த்தி வருகிறார்கள். திரைத் துறையிலிருந்து விலகி இருந்தபோது தூர்தர்ஷன் சேனலில் ஆன்மீக தொடர்களில் நடித்து வந்தார்.

shenbagame song fame shanthi priya starring in OTT Movie

2012-க்கு பிறகு முழுக்கவே நடிப்பிலிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் zee studios original நிறுவனம் மற்றும் Mx player-க்காக முன்னணி நாயகர்கள் நடிக்க, பிரமாண்டமாக தயாராகும் இணைய தொடரில் மிக முக்கியமான பாத்திரத்தில் சாந்திப்பிரியா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read: நடிகை வித்யூலேகாவா இது? கலர்ஃபுல் திருமண, ரிசப்ஷன் மற்றும் ஹனிமூன் பயண ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

shenbagame song fame shanthi priya starring in OTT Movie

People looking for online information on Movie, OTT, Shanthi priya, Shanti priya, Shenbagame song will find this news story useful.