நடிகை வித்யூலேகாவா இது? கலர்ஃபுல் திருமண, ரிசப்ஷன் மற்றும் ஹனிமூன் பயண ஃபோட்டோஸ்!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை வித்யூராமன் என்று அழைக்கப்படும் வித்யூலேகா, தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்துள்ளார்.

வீரம், நீதானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் சந்தானத்துடன் இணைந்து வித்யூலேகா நகைச்சுவை காட்சிகளில் நடித்திருப்பார்.
பிரபல திரைப்பட நடிகர் மோகன் ராமனின் மகளான வித்யூலேகாவிற்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது.
அதன்படி, சஞ்சய் என்பவரை திருமணம் செய்துகொண்ட வித்யூலேகா, திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்காக சென்றுள்ளார். அங்கு கணவருடன் எடுத்துக்கொண்ட க்யூட்டான கேண்டிட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தன் கணவர் சஞ்சயுடன், மாலத்தீவிற்கு தேனிலவு சென்றுள்ள வித்யூலேகா அங்கிருந்துதான் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
முன்னதாக வித்யூலேகா தனது திருமணம் மற்றும் ரிசப்ஷனில் எடுக்கப்பட்ட விதவிதமான கலர்ஃபுல் புகைப்படங்களை தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், வித்யூலேகாவின் ரிசப்ஷனின்போது, சஞ்சய் வித்யூலேகாவின் கைகளில் மோதிரம் அணிவிக்கிறார். அருகில் வித்யூலேகாவின் தந்தை மோகன் ராமன் நிற்கிறார். இதே புகைப்படத்தில் இயக்குநர் செல்வராகவனின் மனைவியும், இயக்குநருமான கீதாஞ்சலி செல்வராகவன் வித்யூலேகாவின் அருகில் நிற்பதையும் காண முடிகிறது.