www.garudabazaar.com
iTechUS

நெற்றி நிறைய சந்தனம் குங்குமம்.. உலகப்புகழ் பெற்ற கோவிலில் சாமி தரிசனம் செய்த தமன்னா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தமன்னா, உலகப்புகழ் பெற்ற பிரபல கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

Tamannaah Bhatia Visit Kerala Guruvaayoor Krishnan Temple

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷாலின் ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்திருந்தார்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில்  அண்மையில் வெளியான பப்ளி பவுன்சர் படத்திலும் தனி கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார்.

மேலும் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியான ’பிளான் ஏ பிளான் பி’ படத்திலும் தமன்னா நடித்திருந்தார்.

தமன்னா தெலுங்கில் குருதுண்டா சீதாக்களம் படத்தில்  நடித்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியானது.  தமன்னா நடிப்பில்  தெலுங்கில் 'That Is Mahalakshmi' படம் விரைவில் வெளிவர இருக்கின்றது.

Tamannaah Bhatia Visit Kerala Guruvaayoor Temple

தெலுங்கில் தற்போது, வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக 'போலோ ஷங்கர்' படத்திலும் தமன்னா நடிக்கிறார். மலையாளத்தில் நடிகர் திலிப் நடிக்கும் 147வது படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா பாட்டியா நடிக்கிறார்.

சமீபத்தில் தமன்னா பாட்டியா,  ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamannaah Bhatia Visit Kerala Guruvaayoor Temple

இந்நிலையில் தமன்னா பாட்டியா கேரளா மாநிலம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். நெற்றி நிறைய சந்தனம் குங்குமம் இட்டு புகைப்படங்களையும் தமன்னா பாட்டியா பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Tamannaah Bhatia Visit Kerala Guruvaayoor Krishnan Temple

People looking for online information on Tamannah, Tammannah will find this news story useful.