'போக்கிரி' சீனுக்கு ஷாந்தனு மற்றும் கீர்த்தி செய்த டிக்டாக் வீடியோ.... செம வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மணிரத்னத்தின் 'வானம் கொட்டட்டும்' படத்தில் நடிகர் ஷாந்தனுவின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவர் தளபதி விஜய்யுடன் இணைந்து 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் ஷாந்தனுவின் சமூக வலைதள பதிவுகள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் 'மாஸ்டர்' படத்தில் இடம் பெற்ற வாத்தி கமிங் பாடலுக்கு நடிகர் ஷாந்தனுவும், கீர்த்தியும் நடனமாடிய வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனையடுத்து நடிகர் ஷாந்தனு தனது மனைவி கீர்த்தியுடன் செய்துள்ள டிக்டாக் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் 'போக்கிரி', 'காதலில் சொதப்புவது எப்படி' பட சீன்களை மீள்உருவாக்கம் செய்துள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Entertainment sub editor