எப்படி இருந்த சூரி இப்படி பாடுபடுறாரே.. அய்யோ பாவம்.! எல்லாம் கொரோனாவால்தான் மக்களே.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சூரி வீட்டில் அடித்த லூட்டியின் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் சூரி. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவையில் அசத்தினார் சூரி. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். வீட்டில் இருக்கும் அவர் தனது மகளிடம் பாடம் படித்து மாட்டிக்கொள்வதோடு, தண்டனையாக தோப்புகரனமும் போடுகிறார். வெளியே போனா போலீஸ் முட்டி போட விடுறாங்க, வீட்டுல இவங்க என சூரி புலம்பும் நகைச்சுவையான வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வீட்டில் அடிக்கும் லூட்டியின் வீடியோக்களை சூரி தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Corona day-9#corona #lockdown #stayhome #staysafe #stayhealthy pic.twitter.com/ojl5NAsS9z
— Actor Soori (@sooriofficial) April 2, 2020
எப்படி இருந்த சூரி இப்படி பாடுபடுறாரே.. அய்யோ பாவம்.! எல்லாம் கொரோனாவால்தான் மக்களே. வீடியோ