'வருத்தப்படாத வாலிபர் சிங்கம்', 'தெகிடி', 'ஈட்டி' போன்ற படங்களில் நடித்தவர் ஷாலு ஷாமு.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க வைப்பதாக கூறி இயக்குநர் ஒருவர் தவறான முறையில் பேசியதாக குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

இது சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து Behindwoodsக்கு ஷாலு ஷாமு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், ''டைரக்டர ஒரு ஈவன்ட்ல மீட் பண்ணேன். நான் தான் கேட்டேன். அடுத்து என்ன புராஜெக்ட் போகுது சார்னு ? அப்போ தான் அவர் அந்த புராஜெக்ட் பத்தி விளக்கமா சொன்னாங்க. அப்போ தான் அவர் அப்படி பேசுனார்.
அப்போது அடுத்து விஜய் தேவரகொண்டாவை வைத்து ஒரு படம் இயக்குகிறேன். அதுக்கான வேலைகள் நடந்துட்டு இருக்குனு சொன்னாரு. அப்புறம் எல்லாமே கன்ஃபார்ம் ஆய்டுச்சுனு சொன்னாரு. காஸ்டிங் ஆரம்பிச்சாச்சானு கேட்கும் போது தான் பேச ஆரம்பிச்சாரு.
அவர் பேச ஆரம்பிக்கும் போதே தெரிஞ்சது . உடனே நான் ஓகே சார்னு அங்க இருந்து கிளம்பிட்டேன். அத தான் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருந்தேன். அவங்க ஆரம்பிக்கும் போதே நிறுத்துங்க என்று சொல்லியிருந்தேன்'' என்றார்.
'உண்மையில் என்ன நடந்தது ?' - மீடூ போஸ்ட் குறித்து ஷாலு ஷாமு பதில் வீடியோ