பிரபல சீரியல் நடிகர் அமித் பார்கவ் மனைவி சிவரஞ்சனிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சீரியல்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் அமித் பார்கவ். மிருதன், சார்லி சாப்ளின் 2 என வெள்ளித்திரையிலும் சில படங்களில் அவர் நடித்துள்ளார்
இவரது மனைவி ஸ்ரீரஞ்சனியும் விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக பணி புரிந்தவர். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், இத்தம்பதிக்கு கடந்த 7ம் தேதி அட்சய திருதியை அன்று அழகிய பெண் குழந்தைப் பிறந்துள்ளது. இத்தகவலை அமித் தனது டிவிட்டர் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
Tags : Amit Bhargav, Sriranjani