www.garudabazaar.com

GP முத்துவின் சர்ப்ரைஸ் எண்ட்ரி .. வந்த உடனேயே பிக்பாஸ் கொடுத்த ஷாக்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

GP Muthu shanthi and Robert surprise entry to BiggBoss House

Also Read | என்ன Prank-லாம் பண்றாங்க.. சீரியஸா ஓடிவந்த ஹவுஸ் மேட்ஸ்.. ஆனாலும் மைனாவுக்கு குசும்பு தாங்க..😂

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

GP Muthu shanthi and Robert surprise entry to BiggBoss House

இதற்கடுத்து, BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் இருந்தது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

GP Muthu shanthi and Robert surprise entry to BiggBoss House

இந்த நிலையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் நடைபெற்றது. இப்படி பரபரப்பான சம்பவங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

GP முத்து மற்றும் சாந்தி உள்ளே வர அனைவரும் உற்சாகமடைந்திருக்கின்றனர். அப்போது GP முத்துவிடம்,"திரும்ப அனுப்பும்போது தான் போகணும்" என்கிறார் பிக்பாஸ். அதற்கு "நீங்க போக சொன்னாலும் போக மாட்டேன். வெளியே அவ்வளவு பாடு பட்டுட்டேன்" என தனக்கே உரித்தான தொனியில் சொல்கிறார் முத்து. தொடர்ந்து கார்டன் பகுதியில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, சாந்தி "எல்லோருக்கும் காபி போடட்டுமா?" என கேட்கிறார். இதற்கு பதில் அளிக்கும் முத்து, "காபி போடுங்க. உப்புமா பக்கம் போய்டாதீங்க" என கலாய்க்கிறார்.

GP Muthu shanthi and Robert surprise entry to BiggBoss House

இதனிடையே, அமுதவாணன்," இந்த டைம் நீங்க போகணும்னு சொன்னாலும் விடமாட்டாங்க. போக சொல்லும்போது தான் போகணும்னு பிக்பாஸ் சொன்னாரு பாத்திங்களா. ரத்த பூமியில கால் வச்சுட்டிங்க" என சொல்ல GP முத்து "அட ஆமால்ல" என யோசிக்கிறார். இதனை கண்டு சக போட்டியாளர்கள் சிரிக்கின்றனர். "இன்னும் 50 நாள் இங்க தான்" என அசீம் சொல்ல, "ஐயையோ" என சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்து செல்கிறார் GP முத்து.

Also Read | வெளியேறிய போட்டியாளர் பற்றி உருக்கமாக பேசிய ஷிவின்.. நெகிழ்ந்த மைனா..!

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu shanthi and Robert surprise entry to BiggBoss House

People looking for online information on Asal kolaar, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Robert, Vijay Television, Vijay tv will find this news story useful.