ஜாக்கி சானுடன் பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான் - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷாரூக் கான் நடிப்பில் கடந்த வருடம் 'ஜீரோ' திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ஷாரூக் கானுக்கு ஜோடியாக அனுஷ்கா ஷர்மா, காத்ரீனா கைஃப் நடிக்க ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார்.

Shah Rukh Khan took Selfie with Jackie Chan in Saudi Arabia

ஜீரோ வெளியாகி ஒரு வருடம் ஆகவுள்ள நிலையில் ஷாரூக் கான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஷாரூக் கான் நடிக்கும் படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அது பற்றி எதுவும் அறிவிக்காமல் பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஷாரூக்கான் சமீபத்தில் சவுதி அரேபியாவில் அந்நாட்டு திரைப்படத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த அளவில் சர்வதேச அளவில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்ற ஜாக்கி சான் மற்றும் பெல்ஜியன் நடிகர் Jean-Claude Van Damme உடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.