ஷாருக்கான் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'ஜீரோ' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அனுஷ்கா சர்மா, கேத்ரினா கைஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இதனையடுத்து அவர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படத்தில் நடிக்க விருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் அந்த செய்திகளின் பின்னால் உண்மையில்லை என்று தெரியவந்தது.
இதுவரை எந்த படமும் ஷாருக்கான் கையில் இல்லை. தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ''நான் இப்போது எந்த படத்திலும் பணிபுரியவில்லை. வழக்கமா ஒரு படம் முடிவுக்கு வந்தா அடுத்த படத்துல வேலை செய்வோம். 3 முதல் 4 மாதங்கள் அந்த படங்கள் வேலை செய்வோம்.
ஆனால் இந்த முறை அது போல் செய்ய விரும்பவில்லை. என் மனது அதற்கு இடம் கொடுக்கவில்லை.நிறைய படங்கள் பார்க்கிறேன். நிறைய கதைகள் கேட்கிறேன். நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். என் மகள் காலேஜ் போகிறாள். என் மகன் படிப்பை முடிக்க போகிறான். அதனால் அவர்களுடன் என் நேரத்தை செலவிடப் போகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.