www.garudabazaar.com

போட்ரா வெடிய! அட்லீ - ஷாருக் கான் இணையும் திரைப்படம் குறித்த வேற லெவல் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ, கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக் கானுடன் இணையும் செய்தி அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

Shah Rukh Khan Atlee Bollywood project mass update

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில் படத்தை அடுத்து ஷாருக் கான் நடிக்கும் படத்தின் ஷுட்டிங்கை அட்லீ தொடங்குவார் என கடந்த வருடத்திலிருந்தே எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சில தகவல்கள் தெரியவந்துள்ளன.

Shah Rukh Khan Atlee Bollywood project mass update

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட கமர்ஷியல் படங்களை பேக் டு பேக் ஹிட் படங்களாக விஜய் நடிப்பில் இயக்கிய அட்லீ, ஷாருக் கானை இயக்கவிருக்கும் தகவல் வெளியானது முதலே ஏறக்குறைய விஜய் ரசிகர்களும் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Shah Rukh Khan Atlee Bollywood project mass update

இந்நிலையில் தான், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்கிற படத்தில் நடித்து வரும் ஷாருக் கான், அந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையோடு அட்லீயின் திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும், அத்துடன் இந்த திரைப்படத்துக்கான டைட்டில் முடிவு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Shah Rukh Khan Atlee Bollywood project mass update

எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: பாலகிருஷ்ணா ஸ்டைலில் "Don't Trouble" பஞ்ச் டயலாக்கை பேசி அசத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

தொடர்புடைய இணைப்புகள்

Shah Rukh Khan Atlee Bollywood project mass update

People looking for online information on Atlee, Atlee Kumar, Vijay will find this news story useful.