www.garudabazaar.com

ஷங்கர் வீட்டில் விசேஷம்... இளம் 'கிரிக்கெட்' வீரரை கரம் பிடிக்கும் இயக்குநரின் மகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகளுக்கும் இளம் கிரிக்கெட் வீரருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

Director Shankar's daughter to marry a cricketer

பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி இந்திய அளவில் கவனம் பெற்றவர் இயக்குநர் ஷங்கர். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யா, மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வரும் ஜுன் 27 ஞாயிறு அன்று திருமணம் நடக்கவிருக்கிறது.

Director Shankar's daughter to marry a cricketer

தொழிலதிபரின் மகன் ரோஹித் என்பவரை கரம் பிடிக்கிறார் ஐஸ்வர்யா. இவர்களுக்கு ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வரும் ஞாயிறு அன்று  மகாபலிபுரத்தில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஐஸ்வர்யா திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார். திருமணத்திற்கு மகாபலிபுரத்தில் எளிமையான முறையில் செட் அமைக்கும் பணி நடைபெறுகிறது. பிரபல கலை இயக்குநர் முத்துராஜ் இந்த அரங்கை அமைத்து வருகிறார். இவர் 2.0 படத்தின் கலை இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Shankar's daughter to marry a cricketer

ஞாயிறு அன்று  நடக்கும் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு, ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர்.

Director Shankar's daughter to marry a cricketer

People looking for online information on Shankar director will find this news story useful.