VIDEO: "ஊசி எனக்கு சாதாரண விஷயமில்லை".. தடுப்பூசி போட்டுக்கொண்ட ராய்லக்ஷ்மி!
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் அத்தனையும் கொரோனா பாதிப்பால் முடங்கி இருப்பதை நாம் அறிவோம். இதுவரை கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் குறைந்தபட்சம் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மூலம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் முனைப்பாக இருக்கிறது. அதன்படி இந்தியாவிலும் அனைத்து மக்களும் தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதேபோல திரைத்துறை பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோவையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார்கள். சமீபத்தில் தடுப்பூசியை அச்ச உணர்வுடன் செலுத்திக்கொண்ட நடிகை ராய் லக்ஷ்மி, அந்த வீடியோவை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த 2005-ல் 'கற்க கசடற' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ராய் லக்ஷ்மி, 'வெள்ளித்திரை', 'தாம் தூம்', 'நான் அவனில்லை 2', 'பெங்களூர் நாட்கள்', போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். என்னதான் தைரியமான ஆளாக இருந்தாலும் ஊசி போடும்போது கொஞ்சம் பயம் இருக்கத்தானே செய்யும். அப்படித்தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட போது மிகவும் பயந்து போய் தனது கண்களை மூடிக்கொண்டுள்ளார் ராய் லக்ஷ்மி. ஊசி குத்தி முடித்தபோது அழும் நிலைமைக்குச் சென்றுள்ளார். இன்ஸ்ட்டாகிராமில் அந்த விடியோவைப் பகிர்ந்துள்ள ராய் லக்ஷ்மி,
"நிஜமாகவே ட்ரிபனோபோபியா (Trypanophobia) என்கிற ஊசி பயம் எனக்கு உண்டு. ஊசி செலுத்திக்கொள்வது எனக்கு சாதாரண விஷயமில்லை. ஆனாலும் இதைச் செய்துகொண்டேன். வீடியோவைப் பார்த்து யாரும் சிரிக்க வேண்டாம்". என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Raai Laxmi's New Look From Her Next Intrigues Fans! What's Brewing? Find Out
- TRENDING: Mohanlal, Soori, Raai Laxmi And Other Celebrities Urge Fans To Take Up Yoga; Share VIRAL Pics
- Raai Laxmi Enthralls With Her Belly Dance– Watch VIDEO Here!
- Yogi Babu Gets Vaccinated, Shares Pic & Important Message For Fans
- AR Rahman Gets Vaccinated Along With His Son; Shares A Cute Pic - Fans Excited
- Sivaangi Gets Vaccinated - Take A Look At The Pictures
- Did Meera Chopra Fake A Front Line Worker ID To Get Vaccinated? Here's Her OFFICIAL Statement On The Controversy
- DD Talks About Her Experience Of Getting Vaccinated
- Cook With Comali Fame Actress Pavithra Vaccinated
- Nayanthara Vignesh Shivan Getting Vaccinated Is Going VIRAL
- Raai Laxmi Getting Married Social Media Post Creates Flutter
- Popular Actress Loses Her Father, Posts An Emotional Message Ft Raai Laxmi
தொடர்புடைய இணைப்புகள்
- சின்ன குழந்தை போல் ஊசி போடுவதற்கு அழுத Raai Laxmi😕😭சிரிப்பை அடக்கமுடியாமல் இருக்கும் டாக்டர்👩⚕
- Raai Lakshmi With Her Mom | MOTHER'S DAY SPECIAL: CELEBRITIES SPECIAL MOMENT WITH THEIR MOMS - Slideshow
- Raai Laxmi's Super Hot Dance Performance - You Will Fall In Love Again!!
- ராய் லக்ஷ்மி | சினிமா ஸ்டார்ஸின் ஓணம் Celebration Photos இதோ - Slideshow
- Thala's Mankatha Guys Are Going To Do This..- Raai Laxmi's Mankatha2 Expectations | SS 75
- Is Raai Laxmi Replacing Mia Khalifa ? | Raai Laxmi Clarifies | Julie 2
- CASTING COUCH: "Nobody Will Go Straight And Ask To Sleep With You!" - Raai Laxmi | Julie 2 |TK614
- Raai Laxmi- Mankatha | Lady Villains Who Gave Tough Fight To Heroes - Slideshow
- Raai Laxmi - Miami, USA | Summer: K'wood Stars Are Holidaying In This Exotic Locations - Slideshow
- Raai Laxmi - Skydiving | Stars And Their Daring Adventures - Slideshow
- Taurus (April 21 - May 21) | Wow! Find Out Which Celeb You Share Your Zodiac Sign With! - Slideshow
- A Lot Of Horror Experiences Happened On The Sets Of Sowcarpettai - Videos