www.garudabazaar.com

Video: 'தளபதி' கையில இருக்குறது 'இந்த டைப்' Gun-ஆ? Expert சொல்லும் ஆச்சரிய தகவல்கள்! #BEASTFirstLook

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டாக்டர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 65.

exciting information over beast vijay carried gun in first look

இந்த படத்திற்கு பீஸ்ட் (Beast) என்று பெயரிடப்பட்டு, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் துப்பாக்கியுடன் நின்று கொண்டு படு மாஸாக போஸ் கொடுக்கிறார். இந்த நிலையில் விஜய் கையில் வைத்திருக்கும் துப்பாக்கி குறித்த தகவல்களை நம்மிடையே பிரத்தியேகமாக ரைஃபில் Expert அஸ்வின் பகிர்ந்திருக்கிறார்.

exciting information over beast vijay carried gun in first look

இதுபற்றி அவர் பேசும்பொழுது, “எனக்கு தெரிந்து 99% நடிகர் விஜய் தம் கையில் வைத்திருக்கும் அந்த துப்பாக்கி உண்மையான துப்பாக்கியாக தான் இருக்க வேண்டும். இதுபோன்ற துப்பாக்கிகளை பாதுகாப்பு துறைகளில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் குடிமக்களும் லைசென்ஸ் வாங்கி பெறுவது உண்டு. இந்த துப்பாக்கிகளில் ஸ்கோப் போடலாமா வேண்டாமா என்று ஒரு விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. இந்த துப்பாக்கியில் நாம் மாற்றங்கள் செய்து ஸ்கோப் போட்டுக் கொள்ள முடியும்.

exciting information over beast vijay carried gun in first look

ஒரு படையாக எதிரிகள் நிற்கும்பொழுது அடுத்தடுத்து ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை சுடுவதற்கான இடங்களில் இப்படியான ஷாட் gunகளை பயன்படுத்த முடியும். ஆனால் உண்மையில் இவை ஷாட்  gunகள் என்பதைவிட, விஜய் கையில் வைத்திருக்கும் இந்த gun, 12 போர் பம்ப் ஆக்சன் ஷாட் gun வகையறாவைச் சேர்ந்தது.

exciting information over beast vijay carried gun in first look

இது எல்லாமே இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.!” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்திருக்கும் இந்த முழுமையான பேட்டி வீடியோவை இணைப்பில் காணலாம்.

VIDEO: 'தளபதி' கையில இருக்குறது 'இந்த டைப்' GUN-ஆ? EXPERT சொல்லும் ஆச்சரிய தகவல்கள்! #BEASTFIRSTLOOK வீடியோ

exciting information over beast vijay carried gun in first look

People looking for online information on Beast, BEASTFirstLook ThalapathyVijay, Nelson Dilipkumar, Vijay will find this news story useful.