777 Charlie Trailer

நயன்தாரா திருமணத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான்… பிரபல இயக்குனர் பகிர்ந்த வைரல் PIC

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் கிங் கான் நடிகர் ஷாருக் கான் நயன்தாரா திருமண நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

Shah rukh attending Nayanthara marriage viral pic

நயன்தாரா…

கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக கடந்த சில ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் வலம் வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் கூட, இருவருமாக இணைந்து திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களும், பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இதையடுத்து அவர்களின் திருமணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

Shah rukh attending Nayanthara marriage viral pic

திருமணம்…

இந்நிலையில் இன்று (ஜூன் 9) விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்க உள்ளது.  இரு தினங்களுக்கு முன் நடந்த (07.06.2022) பத்திரிக்கையாளர் சந்திப்பில் விக்னேஷ் சிவன் இதை அறிவித்திருந்தார். நெருங்கிய உறவினர்கள் & நண்பர்கள் இந்த நிக்ழ்வில் கலந்துகொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Shah rukh attending Nayanthara marriage viral pic

திரைபிரபலங்கள் வருகை…

இந்நிலையில் இன்று காலை முதலே திரைபிரபலங்கள் திருமண நிகழ்வுக்கு வரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெறுகின்றன. இந்நிலையில் இப்போது பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக் கான் இந்த திருமணத்தில் கலந்துகொள்வதை இயக்குனர் அட்லி உறுதி செய்துள்ளார். ஷாருக் கானுடன் பாரம்பரிய உடையில் இருக்கும் அவர் “நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண டைரி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் நயன்தாரா நடித்துவருவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Shah rukh attending Nayanthara marriage viral pic

People looking for online information on Atlee, Nayanthara wedding, Shah Rukh Khan will find this news story useful.