Divya Sridhar Arnav Issue : திவ்யா ஸ்ரீதர் அடுக்கிய குற்றச்சாட்டு.! சீரியல் நடிகர் கைது! என்ன நடந்தது?.. வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல சீரியல் நடிகர் அர்ணவ் தன்னை மதம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாவும், அவர் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதுடன், தன்னிடம் இருந்து விலகி செல்வதாகவும், தன்னுடனான எந்த திருமண ஆதாரத்தையும் வெளியிட கூடாது என வலியுறுத்தி வந்ததாகவும், பெற்றோரிடம் சம்மதம் வாங்காததால் தன்னை விவாகரத்து செய்துவிடவும் தயாராக இருப்பதாகவும் அண்மையில் பிரபல சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், தான் கர்ப்பிணியாக இருப்பதை சோசியல் மீடியாவில் அறிவித்ததால் தன்னை அர்ணவ் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், தன்னை எட்டி உதைத்து, தன் கரு கலையும் அளவுக்கு சென்றுவிட்டதாகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருக்கும் தன்னை வந்து தன் கணவர் பார்க்க கூட இல்லை என்றும், குற்றம் சாட்டிய திவ்யா ஸ்ரீதர், திருமண புகைப்படங்கள், போன் கால் ரெக்கார்டிங்ஸ் உள்ளிட்ட ஆதாரங்களுடன் காவல் துறையினரிடம் புகார் அளித்ததாக ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இதேபோல் இந்த குறித்து ஊடகங்களிடம் பேசிய அர்ணவ், “நான் திவ்யா ஸ்ரீதரை அடித்ததாக சொல்லப்படும் வீட்டில் நான் அந்த நேரத்தில் இல்லை. அதுசம்மந்தப்பட்ட சிசிடிவி ஆதாரம் என்னிடம் உள்ளது. இது வழக்கமான குடும்ப பிரச்சனைதான். நான் நடிப்பு துறையில் இருப்பதால், அவர் பொசசிவாக இப்படி நடந்துகொள்கிறார். அதற்கு அவரது நண்பர்களின் ஆலோசனையும் காரணம். நான் அவரை அடிக்கவில்லை. அவர்தான் சொல்ல போனால் என்னை அடித்தார்.
ஆனால் கரு கலைந்துவிட்டதாக மருத்துவமனையில் இருந்து அவர் கூறுவது, கருவை கலைப்பதற்கான சதியாக நான் கருதுகிறேன்., முறையான மருத்துவ ரிப்போர்ட் வரவேண்டும். எனக்கு என் குழந்தை வேண்டும். அவர் என் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளும் ஆதார்ப்பூர்வமற்றவை, அவருடைய வக்கீலிடமும் நான் இதையே கூறியிருக்கிறேன். சம்மந்தப்பட்ட ஆதாரங்களுடன் காவல்துறையினரிடம் பேசி வருகிறேன்” என்று தெரிவித்திருந்தார். மேலும் இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் அர்ணவ் இதுகுறித்து திவ்யா மீது புகார் அளித்திருந்தார்.
கேளடி கண்மணி எனும் சீரியலில் நடித்து வந்த அர்ணவ், திவ்யாவை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டதாக , திவ்யா தன் புகாரில் குறிப்பிடப் பட்டிருந்த நிலையில், பூந்தமல்லி அருகே படப்பிடிப்பு தளத்தில் இருந்த அர்ணவை மாங்காடு மகளிர் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
DIVYA SRIDHAR ARNAV ISSUE : திவ்யா ஸ்ரீதர் அடுக்கிய குற்றச்சாட்டு.! சீரியல் நடிகர் கைது! என்ன நடந்தது?.. வீடியோ வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴 "ரொம்ப நாளுக்கு அத மறைக்க முடியாது, நான் விடுறதா இல்ல"... Divya விவகாரத்தில் கராரா சொன்ன Arnav
- 🔴 Live: "அவனை நம்பி மோசம் போயிட்டேன்"... கதறி துடிக்கும் கர்ப்பிணி நடிகை Divya
- "அவ சொல்றது எல்லாம் பொய்..!" பகீர் ஆதாரங்கள் வெளியிட்ட அர்னவ்! - பேட்டி | Divya
- "Ajith அண்ணா, ஒரு Selfie எடுக்கலாமா?" 😍 தங்கச்சி பாசத்தை கொட்டிய Pavni ❤️ Thunivu
- திவ்யா Vs அர்னவ்..பற்றி எரியும் கர்ப்பிணி நடிகை சர்ச்சை..நடந்தது என்ன.? நொடிக்கு நொடி திருப்பம்
- 'திருமணத்தை மறைக்க சீரியல் ஹீரோ போட்ட Sketch'.. லீக்கான ஆடியோவால் அதிர்ச்சி..! அடுத்தடுத்த Twist
- "என் முன்னாடியே Husband-க்கு Kiss கொடுக்குறா" கதறும் சீரியல் நடிகை😭! பரபரப்பு பேட்டி | Actress Divya