'தன்னை தானே செதுக்கிய தளபதி'. - விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்.. வெளியான ஸ்பெஷல் போஸ்டர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

விஜய் பிறந்தநாளுக்கு வெளியான சர்ப்ரைஸ் போஸ்டர் | seven screen studios releases a special poster for vijay birthday

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடித்த துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றன. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, ஆர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகிற 22-ஆம் தேதி விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து ரசிகர்கள் அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதில் குஷியாகியுள்ளனர். இதனிடையே மாஸ்டர் படத்தை வழங்கவிருக்கும் Seven Screen Studio சார்பில் இன்று ஸ்பெஷலான போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த மறக்க முடியாத கதாபாத்திரங்கள், அவரின் சிலையை செதுக்குவது போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் பிறந்தநாளுக்கு வெளியான சர்ப்ரைஸ் போஸ்டர் | seven screen studios releases a special poster for vijay birthday

People looking for online information on Lokesh Kanagaraj, Master, Seven Screen Studio, Special Poster, Vijay, Vijay birthday will find this news story useful.