Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

Naane Varuvean : "ஆபத்தான Time-ல சென்சிடிவான ஸ்கிரிப்ட் ரைட்டர் Dhanush" - செல்வராகவன் Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த திரைப்படம் "நானே வருவேன்".

selvaraghavan about dhanush script works exclusive

இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும், நானே வருவேன் படத்திற்கான கதையையும் தனுஷ் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் மத்தியில் நானே வருவேன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் இயக்குனர் செல்வராகவன் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில், நானே வருவேன் திரைப்படம் குறித்தும், தனுஷ் குறித்தும், தான் படத்தில் நடித்தது குறித்தும் பல சுவாரஸ்யங்களை செல்வராகவன் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆன சமயத்தில், நானே வருவேன் ரிலீஸ் ஆனது பற்றி பேசி இருந்த செல்வராகவன், "அடுத்தடுத்து ஃபெஸ்டிவல் வரும் நேரத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவதில் என்ன தவறு இருக்கிறது?. பொன்னியின் செல்வன் எவ்வளவு பெரிய படம். அதனுடன் நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற போட்டி எண்ணமெல்லாம் எதுவும் எங்களுக்கு இல்லை.

selvaraghavan about dhanush script works exclusive

ஃபெஸ்டிவல் சமயத்தில் முன்பிருந்த கலாச்சாரத்தை திருப்பி கொண்டு வர வேண்டும். பொங்கலின் போதெல்லாம் ,முன்பு நான்கு படங்கள் வரை ரிலீஸ் ஆகும். ஆனால், இப்போது அந்த கலாச்சாரம் அழிந்து விட்டது. அதனை மீண்டும் கொண்டு வருவதற்காக கலைப்புலி சார் செய்த ஒரு சிறிய முயற்சி தான் இது" என்று குறிப்பிட்டார்.

selvaraghavan about dhanush script works exclusive

மேலும், நானே வருவேன் படத்திற்கு தனுஷ் கதை எழுதி இருந்த நிலையில், இதுகுறித்து பேசிய செல்வராகவன், "என்னுடன் மீண்டும் இணைந்து பணிபுரிய வேண்டும் என தனுஷ் விருப்பப்பட்டு வந்தார். ஸ்கிரிப்ட் முதல் இருவரும் சேர்ந்து பேசி படம் செய்ய வேண்டும் என நினைத்தார். நிறைய ஸ்கிரிப்ட் நாங்கள் பார்த்தோம். அதே போல, இந்த கதையை குறித்து நானும் தனுஷும் ஒரு 100 முறையாவது மெயில் மூலம் மாறி மாறி விவாதித்து இருப்போம். தனுஷ் ஒரு மிகவும் ஒரு ஆபத்தான அதே வேளையில் சென்சிடிவ் ஆன ஸ்கிரிப்ட் ரைட்டர். மிகவும் ஆழமாக அவர் எழுதுகிறார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

முன்பு எல்லாம், அவர் நடித்த படத்தை பார்க்கும் போது கூட, நடிகர் என்று எனக்கு தோன்றாது. தம்பி என்பது தான் முதலில் தோன்றும். கடந்த ஒரு சில ஆண்டுகளாக தான் நடிகர் என்றும், இப்படி ஆழமாக எப்படி பாடல் எல்லாம் எழுதுகிறார் என்றும் தோன்றியது. அவரிடமே இதை பற்றி கேட்டுள்ளேன்" என்றார்.

இது தவிர இன்னும் பல சுவாரஸ்ய விஷயங்களை செல்வராகவன் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான முழு வீடியோவைக் காண:

NAANE VARUVEAN : "ஆபத்தான TIME-ல சென்சிடிவான ஸ்கிரிப்ட் ரைட்டர் DHANUSH" - செல்வராகவன் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

selvaraghavan about dhanush script works exclusive

People looking for online information on Dhanush, Naane varuvean, Selvaraghavan will find this news story useful.