கவுதம் மேனன் இயக்கும் ’குயின்’ சீரிஸின் இரண்டாவது டிரைலர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 06, 2019 05:52 PM
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வை மையப்படுத்தி இயக்குநர் கவுதம் மேனன் இயக்கிய ‘குயின்’ வெப் சீரிஸின் இரண்டாம் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ஜெயலலிதாவின் சினிமா மற்றும் அரசியல் வாழ்வை சித்தரிக்கும் இந்த சீரிஸ் எம் எக்ஸ் பிளேயர் என்னும் இணைய ஒளிபரப்பு ஊடகத்தில் வெளியிடப்பட உள்ளது.
ரம்யா கிருஷ்ணர் ஜெயலிதாவாக நடிக்க, எம்ஜிஆராக மலையாள நடிகர் இந்திரஞ்சித் சுகுமாரன் நடிக்கிறார். ஜெயலலிதாவை வெவ்வேறு வயதில் அனிகாவும் அஞ்சனா ஜெயபிரகாஷும் சித்தரிக்கின்றனர். இவர்களுடன் சோனியா அகர்வால், வனிதா கிருஷ்ணசந்திரன், விஜி சந்திரசேகரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
முதல் டிரைலர் ஜெயலலிதாவின் வெற்றிகளை கண்முன் நிறுத்த இரண்டாவது டிரைலர் அவர் வாழ்வின் துயரமான கட்டங்களை காட்டுகிறது. கவுதம் மேனனும் பிரசாத் முருகேசனும் இணைந்து இயக்கியுள்ள இந்த சீரிஸ் டிசம்பர் 14ம் தேதி வெளியாகிறது.
கவுதம் மேனன் இயக்கும் ’குயின்’ சீரிஸின் இரண்டாவது டிரைலர் இதோ வீடியோ