புதுமண ஜோடியான ஆர்யா-சாயீஷாவின் ஹனிமூன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

காதலர் தினத்தன்று தங்களது திருமணம் குறித்த அறிவிப்பைனை வெளியிட்ட ஆர்யா-சாயீஷாவுக்கு கடந்த மார்ச்.10ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அரண்மனையில் திருமணம் நடைபெற்றது.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்ற ஆர்யா-சாயீஷா திருமண நிகழ்ச்சியில் சில கோலிவுட் முன்னணி பிரபலங்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அதைத் தொடர்ந்து தற்போது ஹனிமூன் சென்றுள்ள ஆர்யா, தனது மனைவியை புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சாயீஷா, ‘சூரிய ஒளியில் என்னவனுடன் நனைகிறேன்’என பகிர்ந்துள்ளார். மேலும், இந்த புகைப்படத்தை எடுத்தது தாந்து கணவர் ஆர்யா என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘கஜினிகாந்த்’,‘கப்பான்’ திரைப்படங்களில் இணைந்து நடித்த ஆர்யா-சாயீஷா ஜோடி, தற்போது ‘டிக் டிக் டிக்’ பட இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘டெடி’ திரைப்படத்திலும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Soaking in the sun with my love! ☀️
— Sayyeshaa (@sayyeshaa) March 21, 2019
Pic courtesy- Husband @arya_offl 😘😘😘#honeymoon pic.twitter.com/FNjYBVG3eY