டெடி - புது மாப்பிள்ளை ஆர்யாவின் ரீல் ஜோடி இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருமணம் நடந்து முடிந்த கையோடு நடிகர் ஆர்யா மற்றும் சாயீஷா தம்பதி புதிய திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Newly Married couple Arya and Sayyeshaa to act together in Teddy Movie

ஜெயம் ரவி நடித்த ‘மிருதன்’,‘டிக் டிக் டிக்’ திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவிருக்கும் ‘டெடி’ திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் ஆர்யா நடிக்கவிருக்கும் ‘டெடி’ திரைப்படம் குழந்தைகள், இளைஞர்களுக்கான படமாக உருவாகவுள்ளது. இப்படத்தின் பணிகள் மே மாதம் முதல் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி சாயீஷா நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ‘கஜினிகாந்த்’,‘கப்பான்’ திரைப்படங்களில் ஆர்யா-சாயீஷா இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச்.10ம் தேதி ஆர்யா-சாயீஷா திருமணம் ஹைதராபாத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவிருப்பது ரசிகர்களை எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.