www.garudabazaar.com

சதீஷ், பவித்ராவின் ‘நாய் சேகர்’.. செம காமெடி! அதுலயும் மிர்ச்சி சிவா வாய்ஸ் ஓவர் அல்டிமேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

AGS Entertainment கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சதீஷ், குக் வித் கோமாளி பவித்ரா மற்றும் பலர் நடித்து உருவான திரைப்படம் நாய் சேகர். 

Sathish Pavithra starring Naai Sekar release ags entertainment

நாய் சேகர் டிரெய்லர்

முன்னதாக இந்த படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். படம் நிச்சயமாக காமெடிக்கு கேரண்டி என்பது டிரெய்லர் காட்சிகளில் இருந்து ஊர்ஜிதமானது. அத்துடன், காமெடியன் சதீஷ் மற்றும் விஜய் டிவி குக் வித் கோமாளி பவித்ரா இருவரின் காதல் காம்போ எப்படி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பும் ரோம் காம் ரசிகர்களிடையே அதிகரித்தது. 

Sathish Pavithra starring Naai Sekar release ags entertainment

நாய் சேகர் ரிலீஸ்

இந்நிலையில் நாய் சேகர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் சதீஷ் மற்றும் பவித்ராவுடன் ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Sathish Pavithra starring Naai Sekar release ags entertainment

சிவகார்த்திகேயன் பாடல், அனிருத் இசை

இந்த திரைப்படத்திற்கு அஜேஷ் இசையமைத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார். அந்த ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

Also Read: பாவனி - நிரூப் Kiss.. அமீர் ரியாக்‌ஷன தான் கவனிச்சோம்!.. அதே Scene-ல ராஜூ என்ன பண்ணிருக்கார் பாருங்க!

Sathish Pavithra starring Naai Sekar release ags entertainment

மிர்ச்சி சிவாவின் குரல்

குறிப்பாக பிரபல நடிகர் மிர்ச்சி சிவா, இப்படத்தி இடம் பெறும் நாய்க்கு கொடுத்துள்ள வாய்ஸ் ஓவர், குழந்தைகளையும் இப்படத்துக்கு பெருவாரியான ரசிகர்களாக மாற்றியிருக்கிறது. நாயின் மைண்ட் வாய்ஸ் அனைத்தையும் சிவா தமது குரலில் டப்பிங் செய்து அசத்தியுள்ளார். 

Sathish Pavithra starring Naai Sekar release ags entertainment

பண்டிகை நாளில் குடும்ப பொழுதுபோக்கு படம்

யு சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம், இப்படி பொங்கல் பண்டிகை நாளில், குடும்பத்துடன் பார்த்து மகிழ்வதற்கு ஏற்ற படமாக இருப்பதாக படத்தின் முதல் நாள் காட்சிக்கு சென்ற ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: நிரூப்க்கு முத்தம் கொடுத்த பாவனி!.. அதிர்ந்த அமீர்! அப்பவே ஹேர் கட் பண்ணிருக்கலாமோ! வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sathish Pavithra starring Naai Sekar release ags entertainment

People looking for online information on AGS Entertainment, Naai Sekar, Naai Sekar Movie, Naai Sekar Review, Pavithra, Pavithra Lakshmi, Sathish will find this news story useful.