www.garudabazaar.com

புஷ்பானா ஃபையர்… சிஎஸ்கே வீரர் ட்வீட்… மாஸா ரிப்ளை செய்த அல்லு அர்ஜூன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'புஷ்பா' அல்லு அர்ஜுன் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய அணியின் மூத்த வீரரான ரவீந்திர ஜடேஜா  தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில்,  தற்போது வைரலாகி வருகிறது.

Cricketer Ravindra Jadeja Pushpa's Movie look goes viral

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டராக திகழ்பவர் ரவீந்திர ஜடேஜா. அறுவை சிகிச்சை காரணமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சிறிது காலம் ஓய்வில் இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா. அவரை மைதானத்தில் காணமுடியாமல் ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர் . தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை.  அதுமட்டுமின்றி முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை  சிகிச்சை மேற்கொண்டு நீண்ட ஓய்வில் இருந்து வருகிறார்.

Cricketer Ravindra Jadeja Pushpa's Movie look goes viral

புஷ்பா

தெலுங்கு திரையுலகில் ஸ்டைலிஸ் கிங் என்று அழைக்கப்படும அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு  மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  புஷ்பா படத்தில்  தாடி, மீசையுடன் வித்தியாசமான  கெட்டப்பில் அல்லு அர்ஜூன் நடித்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அப்படத்தில் அவர் பேசிய மாஸான வசனங்களை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். 

Cricketer Ravindra Jadeja Pushpa's Movie look goes viral

அத்துடன் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா பாட்டு பட்டிதொட்டியை கலக்கியது. அந்த பாட்டிற்கு வாயை அசைக்காதவர்கள் எவரும்  இல்லை. தெலுங்கு நடிகராக இருந்தாலும் நேரடி தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் அல்லு அர்ஜூனுக்கு  தமிழ்நாட்டிலும் நிறைய ரசிகர்கள்  பெருகி வருகின்றனர்.  அண்மையில் வெளியான இந்த திரைப்படம் திரையுலகினர் மட்டுமின்றி கிரிக்கெட் பிரபலங்கள் வரையிலும் பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Cricketer Ravindra Jadeja Pushpa's Movie look goes viral

என்னது? அடுத்த தரமான செய்கையா 'இது' இருக்குமா? - நம்ம 'ஸ்ரீவள்ளி' ராஷ்மிகா என்ன சொல்லிருக்காங்க?

புஷ்பா கெட்டப்பில் ஜடேஜா

சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா  'புஷ்பா' கெட்டப்பில் உள்ள புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் ஜடேஜா அச்சு அசலாக அல்லு அர்ஜுனின் கதாபாத்திரத்தை நம் கண்முன்  நிறுத்துகிறார்.  ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்ட அவர், "நான் இந்த புகைப்படத்தில் சிகரெட் குடிப்பது போன்ற காட்சிகள் உள்ளன. அதனை கிராஃபிக்ஸ் மூலம் மட்டுமே எடுக்கப்பட்டது. புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Cricketer Ravindra Jadeja Pushpa's Movie look goes viral

முன்னதாக 'புஷ்பா’ பட வசனத்தை அல்லு அர்ஜுன் பாணியில் பேசும் வீடியோவை பகிர்ந்த நிலையில், தற்போது ரவீந்திர ஜடேஜாவின் இந்தப்புகைப்படம், சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

என்னா பெரிய Face Off.. 'ரோஜா' தெரியுமா? வேற லெவலில் ட்ரெண்ட் ஆகும் ரோஜா சீரியலின் வைரல் காட்சி!

அல்லு அர்ஜூன்

புஷ்பா.. னா Flower நினைச்சியா ஃபையர் என்பது போல் ரவீந்திர ஜடேஜாவின் புகைப்படத்திற்கு நடிகர் அல்லு அர்ஜூன் ஃபையர் விட்டு Thaggede Le என பதில் அளித்துள்ளார். அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் ஜடேஜாவை சமூகவலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Cricketer Ravindra Jadeja Pushpa's Movie look goes viral

தொடர்புடைய இணைப்புகள்

Cricketer Ravindra Jadeja Pushpa's Movie look goes viral

People looking for online information on Allu Arjun, அல்லு அர்ஜுன், புஷ்பா, Cricketer, Pushpa movie, Ravindra Jadeja will find this news story useful.