‘பேட்ட’ ஸ்டார் படத்தில் ஜோடி சேரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் டிக் டாக் பிரபலம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 25, 2019 02:04 PM
கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றிப் பெற்றவர் இயக்குநர் பொன்.ராம். அவரோடு இப்போது சசிகுமார் கைகோர்த்துள்ளார். இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தேனியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

’எம்.ஜி.ஆர் மகன் 'என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக களமிறங்கிறார் மிருணாளினி ரவி.
கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளைக் கவனிக்கிறார் இயக்குநர் பொன்.ராம். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரியவுள்ளனர்.
சரவணன் தயாரிப்பு நிர்வாகியாகவும், சித்தார்த், செந்தில்குமார் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக பணிபுரியும் இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.