Viral: காவல்துறையினரோடு இணைந்து போக்குவரத்தை சீர் செய்த பிரபல தமிழ் ஹீரோ!
முகப்பு > சினிமா செய்திகள்தனது முதல் படமான சுப்ரமணியபுரத்தில் தமிழ் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் சசிகுமார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது கேங்ஸ் ஆஃப் வாசிபூர் படத்துக்கு சுப்ரமணியபுரம் உந்துதலாக இருந்ததாக பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.
அடுத்ததாக ’ஈசன்’ படத்தை இயக்கிய அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவும் தொடங்கினார். அதிகம் அலட்டிக்கொள்ளாத தனக்கே உரிதான தனி பாணியை நடிப்பில் கையாண்ட அவர் பல திரைப்படங்களில் நாயகனாகவும் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இப்போது கொரோனா பரவி வருவதால் சினிமா, வணிகம், வியாபாரம், கல்வி என்று அனைத்து துறைகளும் முடங்கி கிடக்கிறது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அத்தியாவசிய தேவைக் கடைகளும் போக்குவரத்தும் குறைவாக இயக்கப்பட்டு வருகிறது.
மக்கள் நெருக்கடி கூடிவிடாமல் இருக்க அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். கட்டுப்பாட்டை மீறி உலவுபவர்களை பிடிக்க ட்ரோன் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரையில் இயக்குநர்/நடிகர் சசிகுமார் போக்குவரத்து காவலர்களோடு இணைந்து போக்குவரத்தை சீர்ப் படுத்தினார். வாகன ஓட்டிகளிடம் “நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு. ஆனா, நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. நாமதான் ஒத்துழைக்கணும்” என்று சசிகுமார் கூறியதாக ’கத்துக்குட்டி’ பட இயக்குநர் இரா.சரவணன் தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு திரைத்துறை கலைஞர் தன் புகழை ஓரமாக வைத்து விட்டு சாலையில் போலீசாரோடு ஒத்துழைத்தது, அனைவரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்புக்காக மதுரையில் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றி இருக்கிறார் சசிகுமார். “நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு. ஆனா, நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. நாமதான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார் சசிகுமார். உளப்பூர்வமான பணி @SasikumarDir pic.twitter.com/mKUyKLUF9U
— இரா.சரவணன் (@erasaravanan) April 18, 2020