அடடே..! "பாக்குற நமக்கே அள்ளு விடுதே..".. பிரபல நடிகையின் ஸ்கை டைவிங் சாகசம்.. 'வீடியோ'
முகப்பு > சினிமா செய்திகள்தெலுங்கு திரைப்படங்கள் மூலம், நாயகியாக சினிமாவுக்குள் அறிமுகம் ஆனவர் நடிகை ஈஷா ரெப்பா.

இந்திக்கு செல்லும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரித்த மரண மாஸ் படம் இது தான்! சூப்பர் அப்டேட்
'ஓய்' என்னும் திரைப்படத்தின் மூலம், தமிழ் திரையுலகில் அறிமுகமான ஈஷா ரெப்பா, அதன் பிறகு ஜி.வி. பிரகாஷ் குமாருடன் 'ஆயிரம் ஜென்மங்கள்' என்னும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ஜி.வி பிரகாஷ்குமார் ஜோடி
இந்த திரைப்படம் வெளியாகாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனிடையே, அரவிந்த் சாமி மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் 'ஒட்டு' என்னும் திரைப்படத்திலும் ஈஷா ரெப்பா நடித்துள்ளார். ஒரே நேரத்தில் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
போட்டோஷூட் மூலம் பட்டையை கிளப்பும் ஈஷா
திரைப்படங்கள் போக, சில வெப் தொடரிலும் நடித்துள்ளார். நடிப்பு ஒரு பக்கம் இருக்க, தன்னுடைய போட்டோஷூட் மூலம், இன்ஸ்டாகிராமில் ஏராளாமான ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஈஷா. இவரது அசத்தல் புகைப்படங்கள் எப்போது வெளியானாலும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகும்.
சாகச வீடியோ
இதனிடையே, தற்போது துபாய் எக்ஸ்போ நடைபெற்று வருவதால், பல பிரபலங்களும் அங்கே சென்று கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நடிகை ஈஷா ரெப்பாவும், துபாய் சென்றிருந்த நிலையில், மிகவும் த்ரில்லிங்கான அனுபவம் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
ஸ்கை டைவிங் அனுபவம்
இன்றைய காலகட்டத்தில், பலரும் ஸ்கை டைவிங் செய்து அதனை வீடியோக்களாக வெளியிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். பிரபலங்களும் இது போன்ற சாகசத்தில் ஈடுபட அதிகம் அஞ்சுவதில்லை. மேலும், சிலருக்கு அது மாதிரியான வீடியோக்களை பார்க்கும் போதே ஒரு நிமிடம் தலை சுற்றி விடும்.
இந்நிலையில், துபாய்க்கு சென்றுள்ள நடிகை ஈஷா ரெப்பா, ஸ்கை டைவிங் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோவை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதிக லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகளை அள்ளி வரும் இந்த வீடியோவுக்கு, ரசிகர்கள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிபிராஜ் நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் புதிய படம்... சென்சார் போர்டு கொடுத்த ரிப்போர்ட்!